ரயில்களில் தண்ணீர் பாட்டில் இலவசமா? ரயில்வே கொடுத்த புது அப்டேட்.. நோட் பண்ணுங்க!

Is Water Bottle Free On Trains: பயணிகள் பலருக்கும் ரயில்களில்  தண்ணீர் பாட்டில் இலவசமா என்ற கேள்வி இருக்கும். இதற்கு தற்போது ரயில்வே அதிகாரிகள் விளக்கம்  அளித்துள்ளனர்.

Is Water Bottle Free On Trains: இந்த தகவல் வரும் நாட்களில் ரயில்களில் பயணிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

1 /7

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். கழிவறை வசதி, படுக்கை வசதி போன்றவை இருப்பதால் பயணிகள் தொலைதூர பயணிகளுக்கு ரயில்களில் பயணித்து வருகின்றனர். 

2 /7

ரயில்களில் பயணிப்பவர்களுக்கு ஐஆர்சிடிசி  குறைந்த விலையில் உணவுகளை வழங்கி வருகிறது. மேலும்,தண்ணீரும் ஒரு பாட்டில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பயணிகள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், வந்தே பாரத், ராஜஸ்தானி விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில்களில் உணவு போன்றவையும் ஐஆர்சிடிசி வழங்குகிறது.

3 /7

இதற்கு  ரயில் டிக்கெட்டுடன் சேர்த்தே, உணவுக்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  வந்தே பாரத், ராஜஸ்தானி விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில்களில் தண்ணீர் பாட்டிலுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் கொடுத்து வந்தனர். இந்தநிலையில் தான், அதற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். 

4 /7

இதுகுறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில், "உணவு விருப்பத்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து பயணிகளுக்கும் இலவச ரயில் நீர் பாட்டில் வழங்கப்படுகிறது. நீங்கள் வந்தே பாரத், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் உணவு விருப்பத்தை தேர்வு செய்யவில்லை என்றாலும் உங்களுக்கு தண்ணீர் பாட்டில் இலவசமாக வழங்கப்படுகிறது" எனக் கூறினார்.

5 /7

மேலும், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ஐஆர்சிடிசி செயலி மற்றும் வலைத்தளம் பயணிகளை உணவைத் தேர்ந்தெடுக்க கட்டாயப்படுத்துவதாக பல பயனர்கள் கூறினர். இதற்கு ரயில்வே அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

6 /7

அவர் கூறுகையில், "இது தவறான தகவல். ஐஆர்சிடிசி வளைதளம் அல்லது செயலில் No food ஆப்ஷன் நீக்கப்படவில்லை. ராஜ்தானி, சதாப்தி அல்லது வந்தே பாரத் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது முன்பதிவு பக்கத்தில் இந்த ஆப்ஷன் இருக்கிறது. இந்த ஆப்ஷன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது நீக்கப்படவில்லை. 

7 /7

ராஜ்தானி, சதாப்தி அல்லது வந்தே பாரத் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது நீங்கள் உள் உணவைத் தவிர்க்க விரும்பினால் no food ஆப்ஷனை தேர்வு செய்யலாம். தேர்வு செய்த பிறகு, உங்களுக்கு ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். உணவுக்கான கட்டணம் வசூலிக்கப்படாது என்று கூறினார்.