Benefits of Jackfruit: கோடைகாலம் தொடங்க இருப்பதால், நாம் நமது உடலின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
Health Benefits Of Jackfruit: கோடையில் கிடைக்கும் மாம்பழம் உள்ளிட்ட பல வகையான பழங்கள் நமது உடலுக்கு நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக பலாப்பழம் இரண்டு வழிகளில் பயன்படுகிறது. சிறியதாக இருக்கும்போது சமையலுக்கும் அது பழமான பின் இனிப்பு சுவையுடன் நமக்கு பழமாக கிடைக்கிறது. எனவே கோடைகாலத்தில் சாப்பிட வேண்டிய இந்த பலாபழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
கோடையில் கிடைக்கும் இந்த பலாபழம் சுவை மிகுந்தது என்பதால், எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கிறது. வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல் இதில் சத்துக்கள் ஏராளம் உள்ளன. அப்படி பலாபழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டது பலாப்பழம். இதில் வைட்டமின் A, C, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
பலாப்பழம் சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா, இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இரத்த சோகை மற்றும் எழும்பு நோய்களில் இருந்து நிவாரணம் பெறுகிறோம்.
பலாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துக்கிறது. ஆண்கள் பெண்கள் என இருபாலரும் இதனை சாப்பிடலாம் . பலாப்பழம் அதிக அளவு நார்சத்து கொண்டுள்ளதால் மலச்சிக்கல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. மேலும், பலாப்பழத்தை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
பலாப்பழத்தை இரண்டு வழிகளில் சாப்பிடலாம். முதலாவதாக, பச்சையான பலாப்பழத்தை காய்கறியாகவும், பக்கோடக்களாகவும், ஊறுகாயாகவும் சாப்பிடலாம். இரண்டாவதாக அதை பழுக்க வைத்து பழமாகவும் சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)