LPG Gas Cylinder News In Tamil: கேஸ் சிலிண்டர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று மக்கள் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டர். மற்றொன்று வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டர் ஆகும்.
LPG Gas Cylinder Latest News: மார்ச் 2025 மாதம் கேஸ் சிலிண்டர் விலை என்ன மாற்றி செய்யப்பட்டு இருக்கிறத? எந்த எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது? போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
கேஸ் சிலிண்டர் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது விலை உயர்ந்திருக்கிறதா எந்த கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்திருக்கிறது? எவ்வளவு கேஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது? போன்ற விவரம் பார்ப்போம்.
முதலில் கேஸ் சிலிண்டர் டெலிவரி பண்ணும்போது, டெலிவரி சார்ஜ் ரூ.30 கொடுப்பது சிலர் வழக்மாக வைத்திருக்கிறார்கள். ஆனால் டெலிவரி சார்ஜ் என்ற எதுவும் கிடையவே கிடையாது. எனவே ரூ.30 கொடுக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. ஒருவேளை உங்களிடம் டெலிவரி செய்யும் நபர் டெலிவரி சார்ஜ் கேட்டு அழுத்தம் கொடுத்தால், உங்கள் கேஜ் ஏஜென்சிக்கு புகார் தெரிவிக்கலாம்.
கேஸ் சிலிண்டர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று மக்கள் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டர். மற்றொன்று வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டர் ஆகும். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து தான் மாதம் மாதம் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கிறது. அந்த வரிசையில் தற்போது கேஸ் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
அதாவது வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டரான 19KG எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை என்பது கடந்த மாதம் ரூ.1959.50 பைசாக இருந்தது. இது இந்த மாதம் ரூ.5.50 பைசா உயர்த்தப்பட்டு ரூ.1965-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. இதன் காரணமாக ஹோட்டல் போன்ற வணிக நிறுவனங்களில் சாப்பாட்டின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் வணிக எல்பிஜி கேஸ் விலை எவ்வளவு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது எனப் பார்த்தால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) தரவுகளின்படி, இந்த மாதம் (மார்ச்) முக்கிய நகரங்களில் 19 கிலோ எடை கொண்ட வணிக எல்பிஜி சிலிண்டர்களுக்கான விலை என்பது டெல்லியில் ரூ.1,803 (முன்பு ரூ.1,797), கொல்கத்தாயில் ரூ.1,913 (முன்பு ரூ.1,907), மும்பையில் ரூ.1,755.50 (முன்பு ரூ.1,749.50), சென்னையில் ரூ.1,965.50 (முன்பு ரூ.1,959.50) ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்து மக்கள் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. போன மாதம் ரூ. 818.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதே விலைக்கு தான் இந்த மாசமும் விற்பனை செய்யப்படுகிறது.
வீடுகளில் பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ 803, கொல்கத்தாவில் ரூ 829, மும்பையில் ரூ 802.50, சென்னையில் ரூ 818.5 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கேஸ் ஏஜென்சி 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் விற்பனை செய்து வருகின்றனர். இந்த 500 ரூபாய் கேஸ் சிலிண்டரை யார் பயன்படுத்தலாம் என்றால், உங்கள் வீட்டில் மூன்று பேர் மட்டுமே இருக்கிறீர்கள் என்றால், தாராளமாக இந்த கேஸ் சிலிண்டரை யூஸ் பண்ணலாம். குறிப்பா சொல்லப்போனால், பலரால் அதிக பணம் கொடுத்து கேஸ் சிலிண்டர் வாங்க முடியாதவர்கள், இந்த சிலிண்டரை பயன்படுத்தலாம்.
500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டரை எந்த கேஸ் ஏஜென்சி கொடுக்கிறார்கள் எனப் பார்த்தால், பாரத் கேஸ் ஏஜென்சி வழங்கி வருகிறது. உங்களுக்கு இந்த ரூ.500 எடை கொண்ட கேஸ் சிலிண்டர் வேண்டும் என்றால், கேஸ் ஏஜென்சியிடம் நேரில் சென்று பேசி, அதன் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்..