தமிழ் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் நாம் அடி எடுத்து வைத்துள்ளோம். இந்த நிலையில், பல முக்கிய கிரகங்களில் இம்மாதம் பெயர்ச்சி உள்ளன. இதனால் மேஷ ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு பார்க்கப்போகிறோம்.
சித்திரை மாதம் பொதுவாகவே பெளர்ணமி விரதத்திற்கு சிறந்ததாகும். இந்த மாதத்தில் சுக்கிரனும், வியாழனும் பரிவர்த்தனை நிலையில் உள்ளனர். சனி சொந்த வீட்டில் இருக்கிறார். கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.
இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி என இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. வரும் 26ஆம் தேதி ராகு கும்ப ராசிக்கும் கேது சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். 30ஆம் தேதி புதன் நீட்ச நிலையில் இருந்து விலகி மேஷ ராசியில் சஞ்சரிக்க உள்ளார். குரு பகவான் மே 5ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ளார்.
மேஷ ராசியில் சூரியன் உச்ச நிலையில் இருக்கிறார். இந்த மாதம் மேஷ ராசிக்கு அமோகமாக இருக்கும். வருமானம் உயரும், வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவு இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொருளாதாரம் நன்றாக இருக்கும். குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் செல்வத்தில் குறைவு இருக்காது. சமூகத்தில் புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும்.
அரசியல்வாதிகளுக்கு புகழ் பரவும், வாழ்க்கையில் அனைத்து வகையிலும் நன்மைகள் தேடி வரும். குடும்பத்தில் இருக்கும் சிக்கல்கள் விலகும். தைரியம் அதிகரிக்கும், தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்.
வேலை மற்றும் தொழில் ரீதியாக வெளிநாடு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பயணங்களில் ஆதாயம் கிடைக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும். குலதெய்வம் அருள் கிடைக்கும்.
வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்த்து, விட்டுக்கொடுத்து போவது நல்லது. பணிச்சுமை இருக்கும். முதலீடுகளில் கவனம் தேவை. குடும்பத்தில் பிறரின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.