இந்த ஆண்டு மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல பண வரவு மற்றும் அதிர்ஷ்டம் உள்ளது.
ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரம் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த புத்தாண்டு 3 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண வரவையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது. அந்த 3 ராசிக்காரர்கள் யார் யார்? என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கி உள்ளது. முதல் 5 ஆண்டுகளுக்கு மேஷ ராசிக்காரர்களுக்கு எவ்வித பெரிய தாக்கமும் இருக்கது. அவர்களுக்கு மாற்றத்தையும் சந்தோஷத்தையும் தரக்கூடிய காலகட்டமாகதான் இருக்கும். அவர்களுக்கு மே மாதம் 11ஆம் தேதிக்கு பின்னர் எதிர்பாராத யோகம், அதிர்ஷ்டம் இருக்கும். முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும்.
ரிஷப் ராசிக்காரர்களுக்கு ஜென்ம குரு விலகி, லாப ஸ்தானத்தில் சனி பகவான் வருகிறார். பதவி, பெயர், புகழ் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். யோகம் உண்டாகும். தொழில் நல்ல மாற்றம் வரும். பணத்திற்கு குறை இருக்காது.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல பண வரவு இருக்கும். வியாபாரம் தொடங்கினால் நல்ல லாபம் காண்பீர்கள். சுப காரிய தடைகள் நீங்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். குரு 11வது இடத்திற்கு பெயர்ச்சி ஆவதால் நிலம், வீடு, வண்டி உள்ளிட்ட சொத்துக்கள் சேரும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் இருந்த தடைகள் நீங்கி பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.