Jana Nayagan Release Date: ஜனநாயகன் படம் பெங்கலை முன்னிட்டு ஜனவரி 09ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு சென்சார் பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன். இப்படம் ஜனவரி 09ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்த சூழலில், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், படம் வெளியாகாமல் தள்ளிப்போய் உள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது.
இதனால் ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என்று தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையில், ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் எனற் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தற்போது 3 தேதிகள் பரிந்துரையில் உள்ளன. தற்போது சென்சார் வழக்கில் இருக்கும் ஜனநாயகன் படத்திற்க்கான தீர்ப்பு உடனடியாக வரும் நிலையில், ஜனவரி 30, பிப்ரவரி 06, பிப்ரவரி 13 ஆகிய தேதிகளில் வெளியாக வாய்ப்புள்ளது.
ஒருவேளை தீர்ப்பு வர தாமதம் ஆகி சென்சார் revising கமிட்டி பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு மேல் படத்தை பார்த்தால் படம் ஏப்ரல் அல்லது மே மாதம் தள்ளி போக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஏனென்றால் 10, +2 வகுப்பு தேர்வுகள், பள்ளி இறுதி தேர்வுகள் இருப்பதால் வசூல் பாதிக்கப்படும் என்று படக்குழு யோசிக்கும். மேலும், பிப்ரவரி 26- மார்ச் 3 ஆம் தேதிக்குள் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதனால் தேர்தல் முடிந்த பின்னர் தான் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.