கோடி கோடியாக கொட்டி வீடு கட்டிய நடிகை ஜான்வி கபூர்!

Written ByThirishala S.P
Published: Sep 12, 2025, 12:59 PM IST|Updated: Sep 12, 2025, 12:59 PM IST

Janhvi Kapoor home worth in crore: ஜான்வி கபூர் 65 கோடி மதிப்புள்ள வீடு! அழகு, கலை, குடும்ப பாசம் எல்லாம் கலந்த இந்த வீடு எப்படி இருக்கும் தெரியுமா?

Janhvi Kapoor home worth in crore: ஜான்வி கபூரின் மும்பை பாந்த்ரா வீடு, கலை, ஸ்டைல், குடும்ப நினைவுகள் கலந்து பிரமாண்டமாக அமைந்துள்ளது. இது வெறும் வீடு அல்ல… அவரது வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு அழகான கதையே!

Janhvi Kapoor Home1/7

ஜான்வி கபூரின் வீடு:

ஜான்வி கபூரின் வீடு: பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், அழகு, கம்பீரம், ஸ்டைல் என்று ரசிகர்களிடம் பெயர் பெற்றவர். மும்பை பாந்த்ராவில் இருக்கும் இவரின் 65 கோடி மதிப்புள்ள டூப்ளக்ஸ் வீடு, குடும்ப பாசமும், சினிமா நினைவுகளும் கலந்த அழகான இடமாக திகழ்கிறது.

Hall Room2/7

ஹால்ரூம்:

ஹால்ரூம்: வீட்டுக்குள் நுழைந்தவுடன் கண்களை கவரும் ஹால்ரூம். வெள்ளை சுவர்கள், தங்க நிற அலங்காரம், மாடர்ன் டிசைனுடன் கலந்த பாரம்பரிய அழகு. நடுவில் இருக்கும் சுழல் படிக்கட்டு, வீட்டின் ஸ்டைலை உயர்த்துகிறது. 

 

Dining Hall3/7

டைனிங் ஹால்:

டைனிங் ஹால்: ஜான்வியின் வீட்டின் டைனிங் ஹால் மிகவும் அழகானது. நீண்ட மர மேசை, மென்மையான நாற்காலிகள், மேல் பகுதியில் தொங்கும் கிரிஸ்டல் சாண்டிலியர் – இவை அனைத்தும் சேர்ந்து சாப்பாட்டை ஒரு ராஜகிய அனுபவமாக மாற்றுகிறது. 

Nature4/7

வெளிச்சமும் இயற்கையும்:

வெளிச்சமும் இயற்கையும்: இந்த வீட்டின் சிறப்பான அம்சம் பெரிய கண்ணாடி ஜன்னல்கள். தரையில் இருந்து கூரையைத் தொடும் உயரத்தில் இருக்கும் இவை, மும்பை நகர வானோட்டத்தையும் பாந்த்ரா பசுமையையும் காட்டுகின்றன. இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை உணரச் செய்கின்றன.

Memories5/7

நினைவுகளும் கலையும்:

நினைவுகளும் கலையும்: வீட்டின் காரிடார் ஒரு சிறிய கலை அரங்கம் போலவே உள்ளது. சுவர்களில் கபூர் குடும்ப புகைப்படங்கள், ஓவியங்கள், சினிமா சம்பந்தப்பட்ட நினைவுகள் இடம் பெற்றுள்ளன. ஒரு பக்கம் பெரிய கண்ணாடி, மறுபக்கம் குடும்ப தருணங்கள் – இதனால் வீடு தனிப்பட்ட உணர்ச்சியுடன் நிரம்பியுள்ளது.

Swimming Pool6/7

தோட்டமும் நீச்சல் குளமும்:

தோட்டமும் நீச்சல் குளமும்: வீட்டின் வெளிய்புறம் அமைந்த தோட்டம் அமைதிக்கும், ஓய்வுக்கும் உகந்தது. அங்குள்ள பெரிய நீச்சல் குளம் ரிசார்ட் உணர்ச்சியைத் தருகிறது. தோட்டத்தில் சிறிய குடும்பக் கூடுக்களும், நண்பர்களுடன் கொண்டாட்டங்களும் எளிதாக நடத்தலாம்.

Beauty7/7

அழகு மற்றும் சுகவாழ்க்கை:

அழகு மற்றும் சுகவாழ்க்கை: இந்த வீட்டின் ஸ்டைலிஷ் படிக்கட்டு, சூடான உணர்வை தரும் ஃபயர்ப்ளேஸ், வசீகரிக்கும் பார்வை – அனைத்தும் சேர்ந்து வீடு கம்பீரமாக மட்டுமல்லாமல் குடும்பத்தோடு வாழ சுகமான இடமாகவும் மாற்றியுள்ளது. ஜான்வி வாழ்க்கையை பிரதிபலிக்கும் வீடாக இது திகழ்கிறது.