ரஜினிகாந்தின் பெரிய ரசிகரான உலக பிரபலம்! பிடித்த படம் எது தெரியுமா?

Written ByYuvashree
Published: Sep 03, 2025, 01:11 PM IST|Updated: Sep 03, 2025, 01:11 PM IST

Takahiro Sakurai Rajinikanth Fan : உலக பிரபலம் ஒருவர், தான் ரஜினிகாந்தின் பெரிய ரசிகர் என்று சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? முழு விவரம்!

Takahiro Sakurai Rajinikanth Fan : நடிகர் ரஜினிகாந்திற்கு உலகளவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது தெரியும். இருப்பினும் அந்த ரசிகர் கூட்டத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களாக-தமிழர்களாக இருப்பர். வெளிநாட்டினர் மிகவும் குறைவு. இப்போது பிரபல ஜப்பானிய குரல் நடிகர் ஒருவர், தான் ரஜினிகாந்தின் பெரிய ரசிகர் என்று கூறியிருக்கிறார். 

Rajinikanth1/7

ரஜினிகாந்த்

தமிழ் திரையுலகில் பெரிய நடிகராக விளங்குபவர் ரஜினிகாந்த். சமீபத்தில் இவர் நடித்திருந்த கூலி திரைப்படம் வெளியானது. வயதான போதிலும் இன்னும் அதே க்ளாஸ் மற்றும் மாஸ் உடன் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Recent Movies2/7

சமீபத்திய படங்கள்

ரஜினிகாந்த் கூலிக்கு முன்னர் வேட்டையன், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில நாட்களே லால் சலாம் படம் தியேட்டர்களில் ஓடியிருந்தாலும், அது ரஜினிகாக ஓடியதாக கூறப்பட்டது. 

Fan Base3/7

ரசிகர் கூட்டம்

ரஜினிக்கு இந்தியாவை தாண்டி உலகளவில் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சில பிரபலங்கள் கூட இவருக்கு ரசிகர்கள்தான்.

Demon Slayer4/7

டீமன் ஸ்லேயர்

ஜப்பானிய அனிமி தொடர், டீமன் ஸ்லேயர். இந்த தொடர் உலகளவில் பெரிய வரவேற்பை பெற்ற தொடராகும். இதில் தொடர்புடைய ஒரு பிரபலம்தான் தற்போது ரஜினி குறித்து பேசியிருக்கிறார்.

Takahiro Sakurai5/7

டகஹிரோ சாகுராய்

ஜப்பானிய குரல் நடிகராக இருக்கும் டகஹிரோ சாகுராய், டீமன் ஸ்லேயர் தொடரில் ஒரு பிரபலமான கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்து வருகிறார். இவர், “நான் ரஜினிகாந்தின் பெரிய ரசிகன்” என்று பேசியிருக்கிறார்.

Muthu6/7

முத்து

அது மட்டுமல்ல, தனக்கு பிடித்த ரஜினியின் படத்தை பற்றியும் அவர் பேசியிருக்கிறார். 1995ல் வெளியான முத்து படம் தனக்கு பிடித்த படம் என்று கூறியிருக்கிறார். ரஜினிகாந்திற்கு ஜப்பானிய மொழியில் டப்பிங் பேசினால், அவர் ஸ்கிரீனில் கொடுக்கும் எனர்ஜியை தன்னால் குரலில் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

Rajamouli Films7/7

ராஜமௌலி படங்கள்

தனக்கு பிடித்த பிற இந்திய படங்கள் குறித்து பேசிய டகஹிரோ சாகுராய், ராஜமௌலியின் பாகுபலி மற்றும் RRR உள்ளிட்ட படங்களை விரும்பி பார்த்ததாகவும் கூறியிருக்கிறார்.