India Probable Playing XI Against Oman: ஓமனுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11 இங்கே.
India vs Oman: இந்திய அணி ஓமனை வரும் செப்டம்பர் 19ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது. இந்த நிலையில், இந்திய பிளேயிங் 11ல் இடம் பெறும் வீரர்கள் யாரெல்லாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
1/11இந்திய டி20 அணியில் சமீபமாக சிறப்பாக செயல்பட்டு வரும் அபிஷேக் சர்மா இந்த ஆசிய கோப்பையின் அனைத்து போட்டிகளில் விளையாடுவார். கடந்த இரண்டு போட்டிகளிலும் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டார்.
2/11இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில்லும் இத்தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஓமனுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார்.
3/11திலக் வர்மாவின் சமீபத்திய சதங்கள் இந்திய அணியில் அவரது இடத்தை உறுதி செய்துள்ளது. இவரை பெஞ்சில் அமர வைக்க வாய்ப்பில்லை என்பதால் தொடர்ந்து அணியில் நீட்டிப்பார்.
4/11இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ். இவர் மிகவும் சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். டி20 கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
5/11விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன், தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது இடத்தில் கில் களமிறங்குவதால், அவரை 5வது இடத்தில் களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஓமனுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார்.
6/11ஓமனுக்கு எதிரான போட்டியில் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் அல்லது துபே-வை பெஞ்சில் அமர வைத்துவிட்டு அவர்களுக்கு பதிலாக இரண்டு பவுலர்கள் களமிறக்கப்படலாம். அதனால் சிவம் துபே அல்லது ஹர்திக் பாண்டியா இருவரில் ஒருவர் தான் விளையாடுவர்.
7/11இந்திய அணியின் நட்சத்திர ஆல் - ரவுண்டர்களில் ஒருவராக அக்சர் படேல் உள்ளார். அவரது திறமை இந்திய அணிக்கு தேவையாக உள்ளது.
8/11முக்கிய சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் திகழ்கிறார். இவர் இந்திய அணிக்கு மிகவும் பலமாக இருப்பதால் அவரது இடத்திற்கு எந்த பிரச்சனையும் வராது.
9/11குல்தீப் யாதவ்-க்கு பக்கபலமாக வருண் சக்கரவர்த்தி இருக்கிறார். இருவரும் எதிரணியை திக்குமுக்காட வைக்கின்றனர். எனவே இவர்களது காம்போவை நிர்வாகம் பிரிக்க நினைக்காது.
10/11ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படும் பட்சத்தில் அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணிக்குள் வருவார். இந்திய அளவில் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக அர்ஷ்தீப் சிங் உள்ளார். 63 போட்டிகளில் 99 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
11/11ஹர்திக் பாண்டியா அல்லது சிவம் துபே ஆகியோரில் ஒருவர் வெளியே செல்லும் பட்சத்தில் ஹர்ஷித் ராணா அணிக்குள் வருவார். இவர் இதுவரை 1 டி20 போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். ஆனால் அப்போட்டியிலேயே 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.