IPL 2026 Mini Auction: SA20 தொடரில் ஜோபெர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் இந்த 4 வீரர்களில் சிலரை, வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே எடுக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.
JSK to CSK: ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதத்திற்கு நடைபெறும் எனலாம். டிசம்பர் மாதம்தான் SA20 தொடர் தொடங்குகிறது. இருப்பினும், ஜேஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்களை சிஎஸ்கேவுக்கும் கொண்டு வர இரு அணியின் தலைமை பயிற்சியாளரான பிளமிங் நிச்சயம் திட்டமிடுவார்.
1/8SA20 தொடர் வரும் டிசம்பரில் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் 2025-26 SA20 தொடருக்கான ஏலம் நடைபெற்றது.
2/8SA20 ஏலத்தில் டெவால்ட் பிரெவிஸ், எய்டன் மார்க்ரம் ஆகியோர் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டார்கள். இருவரையும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி தூக்கியது.
3/8ஐபிஎல் தொடர் அளவுக்கு இல்லாவிட்டாலும், SA20 தொடரும் கிரிக்கெட் உலகில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. இதில் சாதிக்கும் வீரர்கள் கூட ஐபிஎல் ஏலத்தில் முக்கியத்துவம் பெறுவார்கள்.
4/8அந்த வகையில், SA20 தொடரில் ஜோபெர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இந்த 4 வீரர்களில் சிலரை, ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே நிச்சயம் டார்கெட் செய்யும் அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
5/8ஸ்டீவ் ஸ்டோல்க்: இளம் ஓபனரான இவரின் அச்சமற்ற அதிரடி ஆட்டத்தால் அதிக கவனம் ஈர்க்கப்படுகிறார். சிஎஸ்கே ஓபனர்கள் கான்வே, ரச்சின் ஆகியோர் கழட்டிவிடப்பட்டால் இவரை எடுக்க சிஎஸ்கே முயற்சிக்கலாம். இவரை JSK ஏலத்தில் எடுத்துள்ளது.
6/8ரிச்சர்ட் கிளீசன்: இவர் ஏற்கெனவே 2024 சீசனில் சிஎஸ்க அணியில் விளையாடி அனுபவம் கொண்டவர். அனுபவ வேகப்பந்துவீச்சாளரான இவரின் பந்துவீச்சு போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், அனுபவ வீரரும் ஆவார். டெத் பௌலிங்கில் இவர் கலக்குவார்.
7/8வியான் முல்டர்: இவரை எஸ்ஆர்ஹெச் விடுவிக்கும்பட்சத்தில், நிச்சயம் சிஎஸ்கே இவர் மீது ஒரு கண்வைக்கும். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பதாலும், எந்த இடத்திலும் இவர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவார் என்பதாலும் இவரை எடுக்க சிஎஸ்கே முயற்சிக்கும்.
8/8நான்ட்ரே பர்கர்: சிஎஸ்கேவில் கலீல் அகமதை தவிர்த்து வேறு அனுபவமிக்க இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இல்லை. எனவே, பர்கரை அணியில் எடுத்துக்கொண்டால் சிறப்பான பேக்அப்பை கொடுப்பார்.