Jupiter Mercury Sun Conjunction: குரு, புதன், சூரியனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகிறது. இதன் காரணமாக, எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ஜோதிடத்தின் படி, இந்த ஜூன் மாதம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் பார்வையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் சிறப்பு யோகங்கள் உருவாக்கப் போகிறது. அந்தவகையில் ஜூன் மாதத்தில், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மிதுன ராசியில் கிரகங்களின் குருவான குரு, கிரகங்களின் ராஜாவான சூரியன் மற்றும் கிரகங்களின் இளவரசரான புதனின் சேர்க்கை நிகழப் போகிறது. இதனால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும், நேர்மறையாகவும் இருக்கும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகலாம். தொழிலில் புதிய ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும், நிதி நிலையை வலுப்படுத்தும். வாழ்க்கையில் இருக்கும் அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியன், புதன் மற்றும் குருவின் சேர்க்கை நன்மை பயக்கும். மக்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக இருப்பவர்களுக்கு பலனளிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் முடிவுக்கு வரும்.
கடகம்: கடக ராசிக்காரர்களால் இழந்த வேலையை திரும்பி கிடைக்கும். வீடு, சொத்து அல்லது கார் வாங்கும் கனவுகள் நனவாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். நோய்வாய்ப்பட்டவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு அனைத்து ஆசைகளும் மிக எளிதாக நிறைவேறும். உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படக்கூடும். உங்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளை பெறலாம். முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் மிகப்பெரிய நன்மைகளைப் பெறலாம்.
கன்னி: கன்னி ராசிக்காரர்கள் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடம்பெயர விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கக்கூடும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில நல்ல செய்திகள் வரக்கூடும்.
துலாம்: உங்கள் தந்தையின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும், அதிர்ஷ்டமும் பெறலாம். பல ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உயர் கல்வி பெற நினைத்தால், அதில் வெற்றி பெறுவீர்கள். அரசு வேலை செய்பவர்களுக்கும் நன்மை தரும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு திரிகிரகி யோகம் சாதகமான விளைவை ஏற்படுத்தும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வியாபாரத்தில் நன்மை பயக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வெற்றி மழை கொட்டும். தொழில் முன்னேற்றப் பாதை திறக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆன்மீகத் துறையில் நாட்டம் அதிகரிக்கும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். வாகனம் அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம். பதவி மற்றும் கௌரவம் அதிகரிப்பதோடு, மரியாதையும் அதிகரிக்கக்கூடும். தொழில் செய்பவர்கள் பெரும் லாபத்தைப் பெறலாம். பெற்றோருடனான உறவுகள் மேம்படும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.