இன்னும் 4 நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி: ராஜாதி ராஜ பொற்காலம், அனைத்திலும் வெற்றி இந்த ராசிகளுக்கு

Written ByVijaya Lakshmi
Published: Apr 24, 2025, 10:11 AM IST|Updated: Apr 24, 2025, 10:11 AM IST

Guru Nakshatra Peyarchi: ஜோதிடத்தின் படி, வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி குரு மிருகசீரிடம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். 

ஜோதிட வல்லுநர்களின் கூற்றுப்படி, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் குருவின் பெயர்ச்சி மிகவும் மங்களகரமான செயலாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், குருவின் இந்த நட்சத்திர மாற்றத்தால் ஐந்து ராசிக்காரர்களுக்கு சிறப்புப் பலன் கிடைக்கும். அவை எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.

Leo1/7

சிம்மம்

சிம்மம்: மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு நுழைவது சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலனைத் தரும். இந்த மாற்றத்தால், நிதி நிலைமை வலுவடையும். பதவி உயர்வு பெறலாம். முதலீடுகள் மூலம் லாபம் ஈட்டலாம்.

Libra2/7

துலாம்

துலாம்: மிருகசீரிட நட்சத்திரத்தில் நுழையும் குரு, துலாம் ராசியினருக்கு நல்ல பலனைத் தரும். வேலையில் பெரும் வெற்றி கிடைக்கலாம். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வி மற்றும் வெளிநாடு செல்வதற்கான திட்டத்தை பெறலாம்.

Scorpio3/7

விருச்சிகம்

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு மனைவியின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும், உறவுகள் மேம்படும். வியாபாரத்தில் லாபம் ஈட்டலாம். தொழிலில், சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும், தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.

Sagittarius4/7

தனுசு

தனுசு: குரு நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வேலையில் நல்ல செய்தி கிடைக்கலாம், பதவி உயர்வு கிடைக்கலாம். வேலையில் வெற்றி கிடைக்கலாம். நிதி சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம். குடும்ப வாழ்க்கையில நேர்மறையான வெற்றி கிடைக்கும். மத ரீதியான பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

Aquarius5/7

கும்பம்

கும்பம்: குரு நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.மனநிறைவை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குறிப்பாக, குழந்தை பாக்கியம் உண்டாகும். வெளிநாட்டில் வேலை கிடைக்கலாம். லாபம் உண்டாகும்.

Guru Bhagawan6/7

குரு பகவான்

குரு பகவானின் முழுமையான அருளை பெற இந்த மூல மந்திரத்தை கூறவும்: ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ!

 

Disclaimer7/7

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.