அக்டோபர் 19 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் அதிர்ஷ்டம், செல்வ மழை பொழியும்

Written ByVijaya Lakshmi
Published: Jul 19, 2025, 11:32 AM IST|Updated: Jul 19, 2025, 11:32 AM IST

Guru Peyarchi 2025: தேவர்களின் குருவான குரு பகவான் வரும் அக்டோபர் 19 கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இது பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். இந்நிலையில் இந்த ராசி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்கள் சுப பலன் உண்டாகும் என்று பார்ப்போம்.

Guru Peyarchi Palangal: குரு மிதுன ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். மிதுன ராசிக்குப் பிறகு, குரு தற்போது கடக ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அக்டோபர் முதல் டிசம்பர் வரை குரு முக்கியமான மாற்றங்களைச் செய்யப் போகிறார். இந்த குரு ராசி மாற்றம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி நுழைவார்

1/11

குரு மிதுன ராசியிலிருந்து விலகி சந்திரனின் ராசியான கடக ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். குருவின் கடக ராசிப் பெயர்ச்சியுடன், சில ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும். குருவின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள் என்பதை அறிந்து கொள்ளவோம்.

aries2/11

மேஷம்

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வேலையில் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தரும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

taurus3/11

ரிஷபம்

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சியால் நல்ல பலனைப் பெறுவீர்கள். குடும்பப் பிரச்சினைகள் தீர்வு பெறும். தொழிலதிபர்கள் லாபத்தை பெறலாம். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். 

 

gemini4/11

மிதுனம்

மிதுனம்: குருவின் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களைப் பெறலாம். பணியிடத்தில் வெகுமதி கிடைக்கும். காதல் உறவுகள் மேம்படும். மன அழுத்தத்திலிருந்து நீங்கள் நிவாரணம் பெறலாம்.

 

leo5/11

சிம்மம்

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் குருவின் பெயர்ச்சியால் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். பல முக்கிய பொறுப்புகளை பெறலாம். நிதி நன்மை ஏற்படும். மத நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

libra6/11

துலாம்

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சியால் சிறந்த பலனைப் பெறுவீர்கள். கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். சமூகத்தில் புதிய மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் இன்பம் பெருகும்.

 

scorpio7/11

விருச்சிகம்

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சியால் திடீர் பண ஆதாயம் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் பெறலாம். சிலருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். செல்வம் அதிகரிக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். பெரிய இழப்பிலிருந்தும் நீங்கள் மீண்டு வருவீர்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

 

sagittarius8/11

தனுசு

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு, குருவின் பெயர்ச்சி நல்ல பலனைத் தரப் போகிறார். தொழில் விரிவடையக்கூடும். நிதி நிலை மேம்படும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல செய்திகளைப் பெறலாம். திருமண வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய வாகனம் அல்லது சொத்தை வாங்கலாம். சமூக மரியாதையும் அதிகரிக்கும். 

 

pisces9/11

மீனம்

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு கடக ராசியில் குருவின் பெயர்ச்சி நல்ல பலனைத் தரப் போகிறது. குடும்பப் பொறுப்புகள் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலாளியுடனான உங்கள் உறவு வலுவடையும், பணியிடத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் மரியாதையைப் பெறலாம்.

 

10/11

குரு பகவானின் முழுமையான அருளை பெற இந்த மூல மந்திரத்தை கூறவும்: ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ!

 

Disclaimer11/11

பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.