Jupiter Transit in Cancer: ஜோதிடத்தின்படி, குரு தனது உச்ச ராசியான கடகத்தில் பெயர்ச்சியடைந்து ஹன்ஸ் மஹாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கப் போகிறார், இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உண்டாகும்...
அக்டோபர் மாதத்தில் குரு பகவான் கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் இந்த நிகழ்வால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகப் போகிறது. இது நிதி ரீதியாக பல நன்மைகளைத் தரும். வாழ்க்கையில் பாசிட்டிவ் மாற்றங்களை காணலாம்.
1/7வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கும், இதன் மூலம் மங்களகரமான ராஜயோகத்தை உருவாகும். இதன் விளைவு மனித வாழ்க்கையிலும் பூமியிலும் காணப்படுகிறது.
2/712 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு, அக்டோபரில் தனது உச்ச ராசியான கடக ராசியில் நுழையப் போகிறார், இதன் காரணமாக ஹன்ஸ் மஹாபுருஷ ராஜயோகம் உருவாகப் போகிறது. இது 12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக இருக்கும் காரணமாத்தால் சில ராசிகளுக்கு நல்ல நாட்கள் தொடங்கலாம். இதனுடன், இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு மற்றும் வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை பெறலாம். இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் எவை என்பதை பார்ப்போம்.
3/7கன்னி: ஹன்ஸ் ராஜயோகம் உருவாவது கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை சிறப்பாக மாறும். நீங்கள் வங்கி, அல்லது ஊடகம் போன்ற துறைகளில் இருந்தால், உங்கள் உரையாடல் மூலம் மட்டுமே ஒப்பந்தங்கள் உறுதிப்படுத்தப்படும். அதே நேரத்தில், இந்த நேரத்தில் பங்குச் சந்தை, பந்தயம் மற்றும் லாட்டரியில் லாபம் பெறலாம்.
4/7துலாம்: ஹன்ஸ் ராஜயோகம் உருவாகுவது துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். உங்களுக்கு பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் அல்லது சமூக கௌரவம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் மற்றும் மூத்தவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். புதிய வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும், திருமண வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும்.
5/7விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கலாம். நீங்கள் அதிர்ஷ்டத்தை பெறலாம். உங்கள் ஆர்வம் மதப் பணிகளில் இருக்கும். வாழ்க்கையின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். இந்த நேரத்தில் உங்கள் பயணங்கள் நன்மை பயக்கும், குறிப்பாக நீங்கள் வெளிநாட்டில் வேலை செய்தால். வேலையில் பதவி உயர்வைப் பெறலாம்.
6/7குரு பகவானின் முழுமையான அருளை பெற இந்த மூல மந்திரத்தை கூறவும்: ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ!
7/7பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.