குரு பெயர்ச்சி பலன்கள்: மகா யோகம், அனைத்திலும் வெற்றி இந்த ராசிகளுக்கு

Guru Peyarchi 2025 : ரிஷப ராசியில் 12 மாதங்களுக்கும் மேலாக பயணித்து வந்த குரு, இப்போது மிதுன ராசிக்கு இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். குருவின் இந்தப் பெயர்ச்சி அடுத்த மாதம் அதாவது மே 14 ஆம் தேதி நடைபெறும். 

சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசியிலிருந்து விலகி குரு பகவான் புதனின் அதிபதி ராசியான மிதுன ராசிக்குச் பயணிக்க போகிறார். அதேசமயம் ராகு கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைவார், ராகு குருவின் ஒன்பதாவது வீட்டில் குடியேறுவதால் பஞ்சம யோகம் உருவாகும்.

1 /9

குரு பெயர்ச்சியால் மிதுனம், கடகம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தை தரும். தொழிலில் முன்னேற்றம் பெறுவீர்கள். மேலும், இந்தப் பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் இந்த ராசிக்காரர்கள் பெறப் போகின்றனர்.  

2 /9

தேவர்களின் குருவான குரு, வருடம் ஒருமுறை தனது ராசியை மாற்றிவார். அதன்படி இந்த முறை மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவார் குரு பகவான். இந்த அற்புதமான நிகழ்வு வரும் மே 14 ஆம் தேதி இரவு 2:30 மணிக்கு நிகழும். குருவின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.  

3 /9

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சியால் நல்ல பலன் உண்டாகும். பல புதிய வாய்ப்புகளை பெறலாம். பணியிடத்தில், மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசை நிறைவேறும். விரைவில் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.  

4 /9

கடக ராசி: கடக ராசிகாரர்களுக்கு குருவின் பெயர்ச்சியால் பல நல்ல பலன்கள் கிடைக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு பணம் மழை கொட்டும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.  

5 /9

விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு, குருவின் பெயர்ச்சியால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சில சமூக முடிவுகளை பெறலாம். நிதி ரீதியாக ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சி பெருகும். வலது கண்ணில் பிரச்சனை ஏற்படலாம்.  

6 /9

மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு, இந்தப் பெயர்ச்சியால் நிதி ஆதாயம் உண்டாகும். நல்ல பலன் கிடைக்கும். முதலீடு மூலம் ஆதாயம் கிடைக்கும். வணிகத்தில் விரும்பிய லாபத்தைப் பெறுவீர்கள். செல்வமும் மரியாதையும் அதிகரிக்கும். குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீடு மூலம் நன்மை உண்டாகும். சில தேவையற்ற பதற்றம் ஏற்படலாம்.  

7 /9

மீன ராசி: மீன ராசிக்காரர்களுக்கு, குருவின் பெயர்ச்சியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு உண்டாகும். தொழிலில் விரும்பிய வெற்றியை அடைவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.

8 /9

வியாழக்கிழமைகளில் குரு பகவானின் சன்னதியில் அவரை வணங்கி கொண்டக்கடலை மாலை சாற்றுவது குரு பகவானின் அருளை பெற உதவும். 

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.