Jupiter Rise 2025: குரு மிதுன ராசியில் உதயமாகப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும்.
ஜோதிடத்தின் படி, குரு கிரகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகும். ஏனெனில் இந்த கிரகம் நல்ல பலன்களை அள்ளித் தரும். அதேபோல் குரு தனுசு மற்றும் மீனம் ராசியில் அதிபதி ஆவார். அதடன் குரு கடக ராசியில் எப்போதும் உச்சமாக இருப்பார். ஒருவரின் ஜாதகத்தில் குருவின் பார்வை ஏற்பட்டால் திருமணம், கல்வி, குழந்தைகள், செல்வம் மற்றும் தொழில் என அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த அனைத்து மாற்றங்களும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
பல வித நன்மைகளை அளிக்கும் சுப கிரகமாக குரு பகவான் பார்க்கப்படுகிறார். இவரது ஒவ்வொரு அசைவும் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
மே 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆனார். அதன் பிறகு தற்போது குரு பகவான் அதே ராசியில் உதயமாவார்.
குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார நிலை மேம்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுனம்: குருவின் உதயம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். தொழில் முன்னேற்றத்திற்கான பொன்னான வாய்ப்புகளையும் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.
துலாம்: குருவின் உதயம் உங்களுக்கு நன்மை பயக்கும். அதிர்ஷ்டம் கிடைக்கக்கூடும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிவடையும். அதிர்ஷ்டம் பெருகும். தொழில் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். கல்வித்துறையில் வெற்றி பெறுவார்கள், கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.
மீனம்: குருவின் உதயத்தால், மீன ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கக்கூடும். ஏனென்றால் குரு உங்கள் ராசியிலிருந்து நான்காவது வீட்டில் உதயமாகப் போகிறார். எனவே, ஆடம்பரங்களும் வசதிகளும் அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன, உங்கள் பணி பாராட்டப்படும். மரியாதை கிடைக்கும்.
குரு பகவானின் பரிபூரண அருள் பெற தினமும், 'ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்' என்ற குரு காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.