குருவின் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம்! யார் யாருக்கு தெரியுமா?

Written ByRK Spark
Published: Nov 10, 2025, 08:49 PM IST|Updated: Nov 10, 2025, 08:49 PM IST

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் இடமாற்றம் ஒவ்வொரு ராசியிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், தேவகுருவான வியாழன் தனது இயக்கத்தை மாற்றுவது மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. வரும் நவம்பர் 11-ம் தேதி முதல், குரு பகவான் கடக ராசியில் வக்ர நிலையில் பயணிக்க தொடங்குகிறார். 

1/6

விருச்சிக ராசி

இந்த குருவின் வக்ர பெயர்ச்சி, விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான காலமாக அமையப்போகிறது. நீண்ட நாட்களாகத் தீராமல் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக முடிவுக்கு வரும். செய்யும் தொழில், உத்தியோகத்தில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் முழு ஆதரவால் பல காரியங்கள் கைகூடும்.

2/6

திருமண வாழ்வில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, மகிழ்ச்சியும், அன்பும் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு, செல்வம் பல வழிகளிலும் தேடி வரும். மொத்தத்தில், விருச்சிக ராசியினருக்கு இது ஒரு பொன்னான காலம்.

3/6

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர பெயர்ச்சி ஜாக்பாட் அடிக்கும் நேரமாகும். குறிப்பாக, வியாபாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. கூட்டாக செய்யப்படும் தொழில் முயற்சிகள் அமோக வெற்றியைத் தரும்.

4/6

தொழிலில் லாபம் பெருகும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த குடும்பப் பிரச்சனைகள் சுமூகமாகத் தீரும்.

5/6

ரிஷப ராசி: ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்ப உறவுகளை வலுப்படுத்த இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். பிரிந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் சேர வாய்ப்பு உண்டாகும். தொழில் சம்பந்தமான முடிவுகளை நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் எடுப்பது பெரும் நன்மையைத் தரும்.

 

6/6

பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, தேவையற்ற சிக்கல்களில் இருந்து காப்பாற்றும். நீண்டகாலமாக தொல்லை கொடுத்து வந்த நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் வர அதிக வாய்ப்புள்ளது.