குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு வெற்றி, ராஜயோகம், பொற்காலம் ஆரம்பம்

Guru Gochar 2025: 2025 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு பிறகு, ஆதாவது மே 14 ஆம் தேதி குரு கிரகம் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு புகழ், பணம், பொற்காலம், ராஜயோகம் கிடைக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.

Jupiter Transit 2025: வரும் தமிழ் புத்தாண்டுக்கு பிறகு,  குரு கிரகம் தனது ராசியை மாற்றுவார். குருவின் ராசி மாற்றம் மிதுன ராசியில் வரும் மே 14 புதன்கிழமை இரவு 11:20 மணிக்கு நிகழும். அத்தகைய சூழ்நிலையில், குருவின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு செல்வம், புதிய வேலை, வெளிநாட்டு பயணம், மற்றும் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளை நடத்தி வைக்கும்.

1 /9

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி மங்கள பலனைத் தரும். திருமணம் நடைபெறும். அதிர்ஷ்டம் பெருகும். பயணம் செய்யும் வாய்ப்பை பெறுவீர்கள். கூட்டுத் தொழில் பலன் தரும். நிதி ஆதாயங்கள் உண்டாகும்.

2 /9

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி நல்ல பலனைத் தரும். செல்வம் அதிகரிக்கும். பதவி மற்றும் கௌரவம் உயரும். நிதி நிலை வலுவடையும். சொத்துக்கள் வாங்கி லாபம் அடைவீர்கள். வியாபாரத்திலும் லாபம் ஈட்டலாம்.

3 /9

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை தரும். சில நல்ல செய்திகளைப் பெறலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கை முன்னேற்றம் அடையும். மகிழ்ச்சி பெருகும். ஆன்மீக வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். 

4 /9

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பை பெறுவார்கள் அல்லது புதிய வீடு, கார் வாங்கலாம். தொழிலில் வெற்றி பொங்கும். நிலை நிலை வலுவடையும். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும்.

5 /9

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி புகழைத் தரும். வேலையில் பாராட்டுகளை பெறலாம். பெரிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

6 /9

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை தரும். கௌரவம் அதிகரிக்கும். சமூக அந்தஸ்து உயரும். குருவின் ஆசியை பெறுவீர்கள். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கலாம். 

7 /9

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சியால் பயனடைவார்கள். கல்வி மற்றும் ஆன்மீக வழிபாடலில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் நடைபெறும். நாள்பட்ட நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

8 /9

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் உண்டாகும். பெரிய நன்மைகள் கிடைக்கும். பணி இடத்தில் மதிப்பு கூடும். கௌரவ விருதுகளை பெறலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.