Guru Peyarchi Palangal: குரு பகவான் ஏப்ரல் 20 அன்று புனர்பூச நட்சத்திரத்திற்கு மாறுகிறார். இதனால் 4 ராசிக்காரர்கள் நிதி, கல்வி மற்றும் ஆரோக்கியம் ரீதியாக சிறப்பான பலன்களை பெற இருக்கின்றனர்.
ஜோதிட்டத்தில் குரு மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குரு தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்ளும். இந்த நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி குரு தனது ராசியை மாற இருக்கிறார். அவர் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
இந்த புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குரு என்பதால், இந்த நட்சத்திர மாற்றம் மிகவும் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாக அனைத்து ராசிக்காரர்களும் நல்ல பலன்களை பெற இருக்கின்றனர். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் அபிரிமிதமான பலன்களை பெற இருக்கின்றனர்.
மேஷம் (Aries): குரு பகவானின் இந்த நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான காலகட்டத்தை கொடுக்க இருக்கிறது. பொருளாதாரம் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். புது மனை, வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. அலுவலகத்தில் உங்களின் உழைப்பு பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும், இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வெற்றி பெறும்.
மிதுனம் (Gemini): குரு பகவானின் நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்காரர்கள் வளர்ச்சி அடைய இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புது சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால் இந்த காலகட்டத்தில் சரி ஆகும். தடைப்பட்டிருக்கும் வேலைகள் முடிவடையும்.
துலாம் (Libra): குரு பகவானின் துலாம் ராசிக்காரர்கள் மகத்தான நன்மைகளை பெற இருக்கின்றனர். இதுவரை இருந்த பணப்பிரச்சனைகள் தீரும். சேமிப்பு அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். தொழிலில் லாபம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வரன் அமையும். மேலும், மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும்.
தனுசு (Sagittarius): குரு பகவானின் இந்த நட்சத்திர மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகளை தர இருக்கிறது. வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. தொழில் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி பெற முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.