சனியின் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: 2026ல் 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட், அதிரடி ராஜயோகம்

Venus Transit 2026 in Capricon : 2026 ஆம் ஆண்டு ஒரு அற்புதமான தொடக்கத்துடன் தொடங்க உள்ளது. ஏனெனில் செல்வம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையை அள்ளித் தரும் கிரகமான சுக்கிரன், சனியின் ராசிக்குள் தற்போது பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் மூன்று ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட், அதிரடி ராஜயவகம் உண்டாகும். இந்த முக்கிய சுக்கிர பெயர்ச்சி எப்போது நிகழும் என்பதைப் பார்ப்போம்.

1 /7

சுக்கிரன், அழகு, செல்வம், அன்பு, அறிவாற்றல், பேச்சாற்றல், ஆடம்பரம், ஈர்ப்பு ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், அவர் அனைவரையும் ஈர்க்கும் ஆற்றல் கொண்ட நபராக, ஆடம்பர வசதிகளுடன் வாழ்கிறார். சுக்கிரனின் பெயர்ச்சி பல ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் அன்பு, காதல் ஆகியவற்றை மேம்படுத்தி அவர்களின் சௌகரியங்களை அதிகரிக்கும். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகள் மீதும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்கள் இதனால் அதிக நன்மை அடைவார்கள்.

2 /7

2026 ஆம் ஆண்டின் தொடக்கம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். புத்தாண்டின் தொடக்கத்தில், சனியின் ராசியில் முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறுகிறது. அதன்படி வரும் ஜனவரி 13, 2026 அன்று, சுக்கிரன் மகர ராசிக்கு இடம்ப்பெயர்ச்சி அடைகிறார். பிப்ரவரி 6 ஆம் தேதி வரை சுக்கிரன் மகர ராசியில் பயணிப்பார், இந்த பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை தரும்.

3 /7

ரிஷபம்: சனியின் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். பொங்கலுக்கு முன்பு அனைத்து வேலைகளும் விரைவாக முடிக்கப்படும். மரியாதை அதிகரிக்கும். உங்களுக்கு விருது கிடைக்கலாம். உங்கள் செல்வம் அதிகரிக்கும். புதிய ஆதாரங்களில் இருந்து வருமானம் வந்து சேரும். திருமணமாகாதவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.  

4 /7

துலாம்: சுக்கிரன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன் கிடைக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மிகவும் மங்கள பலனைத் தரக்கூடும். வசதிகள் மற்றும் இன்பங்கள் அதிகரிக்கும். மூதாதையர் சொத்துக்களால் நீங்கள் பயனடைவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.  

5 /7

மகரம்: சுக்கிரன் பெயர்ச்சி மகர ராசியில் தான் நிகழப் போகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் பெருகும். இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரவு ஏற்படும். தைரியம் அதிகரிக்கும். தடைபட்ட பண வரவு இப்போது திரும்பக் கிடைக்கும், நிலுவையில் உள்ள திட்டங்கள் முழுமையாக நிறைவேறும். நீண்ட காலமாக வீடு அல்லது கார் வாங்க திட்டமிட்டு இருந்தால் பொங்கலுக்கு பிறகு வாங்கவும்.

6 /7

வாழ்வில் வசீகரம், ஈர்ப்பு, ஆடம்பரம், ஈகை ஆகியவற்றுடன் அனைத்து விதமான செல்வத்தையும், புகழையும் பெற, சுக்கிரனை வணங்கி, ‘"ஓம் அச்வ த்வஜாய வித்மஹே தநுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்." என்ற சுக்கிரன் காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.