கேகேடி லோன் பெற்ற பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! டாப் அப் லோன் பெறலாம்

Kalaignar Kaivinai Thittam : கலைஞர் கைவினைத் திட்டத்தில் லோன் பெற்ற  பெண்கள், பெறாதவர்கள் இருவருக்கும் தமிழ்நாடு அரசின் குட் நியூஸ் கொடுத்துள்ளது.

Kalaignar Kaivinai Thittam : கலைஞர் கைவினைத் திட்டத்தில் லோன் பெற்ற  பெண்கள் டாப்அப் லோன் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

1 /14

கலைஞர் கைவினைத் திட்டத்தின் ஆங்கில சுருக்கமே (Kalaignar Kaivinai Thittam - KKT) கேகேடி திட்டமாகும். இத்திட்டத்தில் இப்போது ஒரு சூப்பர் அப்டேட் வந்துள்ளது. இத்திட்டத்தில் லோன் பெற்ற பெண்கள் கூடுதல் லோன் அதாவது, டாப் அப் லோன் பெறவும், புதிதாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களும் லோன் பெற விண்ணப்பிக்கலாம். முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

2 /14

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண் தொழில் முனைவோரை உருவாக்க அறிமுகப்படுத்த உள்ள இத்திட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தில் லோன் பெற்ற  பெண்கள் டாப்அப் லோன் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

3 /14

அதபோல், புதிதாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களும் இத்திட்டத்தில் லோன் பெற விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாடுஅரசு 2025-26 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத்திட்டம் (TWEES)-யை அறிமுகப்படுத்தி செயல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. 

4 /14

இத்திட்டத்தின் மூலம் சமூகமற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய பெண்கள் / மூன்றாம் பாலினத்தவர்கள் தொழில் தொடங்குதல் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான நிதியுதவி, திறன் பயிற்சி மற்றும் சந்தை இணைப்பு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

5 /14

இத்திட்டத்தின் முக்கிய தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் / மூன்றாம் பாலினத்தவர்கள் குறிப்பாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய பிரிவுகளை சேர்ந்த பெண்கள் தொழில் முனைவோராக உருவெடுக்கவும், முன்னேறவும் ஆதரவு வழங்குவதாகும். 

6 /14

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், ஆதரவற்ற கைம்பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறைந்த பட்ச வயது 18 அதிக பட்ச வயது 55 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

7 /14

பெண்கள்/மூன்றாம் பாலினத்தவர்கள் தொழில் முனைவோர்களுக்கான திட்டம், குறிப்பாக பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின் தங்கிய பின்னணியிலிருந்து வருபவர்களுக்கு, விண்ணப்பதாரர்கள் வயது 18 முதல் 55 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும், குறைந்த பட்ச கல்வித் தகுதி தேவையில்லை. 

8 /14

இத்திட்டத்தின் கீழ் வர்த்தகம் / உற்பத்தி / சேவை திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பு ரூ.10.00 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது. மேலும் அரசு மானியம் திட்ட மதிப்பீட்டில் 25% அல்லது அதிக பட்சமாக ரூ.2.00 இலட்சம் (ரூபாய் இரண்டு இலட்சம்) வரை வழங்கப்படும். இக்கடனுதவி பெற வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை.

9 /14

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில், மட்கும் பொருட்கள் தயாரிப்பு, விவசாய உற்பத்தி கழிவுகளில் (தவிடு, வைக்கோல்) இருந்து பொருட்கள் தயாரித்தல், தென்னை நார் மூலம் தயாரிக்கப்படும் செடி வளர்க்கும் தொட்டிகள், காகித கழிவுகளில் இருந்து பென்சில் தயாரித்தல், ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிகலன்கள் தயாரிப்பு தொழில்களை செய்யலாம்.

10 /14

கண்ணாடி ஓவியம், கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு, பட்டுநூல் அணிகலன் தயாரிப்பு, வீட்டில் தயார் செய்யும் உணவு பொருட்கள் விற்பனையகம், யோகாநிலையம், உடற்பயிற்சி நிலையம், சலவை நிலையங்கள், மணப்பெண் அலங்கார நிலையம், மெகந்தி மற்றும் டாட்டூ நிலையம், சத்துமாவு உருண்டைகள் தயாரிப்பு, சத்துமாவு சார்ந்த பேக்கரி உணவு பொருட்கள் தயாரிப்பு நிலையம் வைக்கவும் இத்திட்டத்தில் லோன் பெறலாம்.  

11 /14

தானிய வகைகளில் தயார் செய்யும் ஐஸ்கிரீம், எலுமிச்சை எண்ணெய் தயாரிப்பு, வெட்டிவேர் எண்ணெய் தயாரிப்பு மற்றும் இதர தகுதியான தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  

12 /14

தொழிலின் விரிவாக்கத்திற்காக கடன் பெற விரும்பும் KKT மகளிர் பயனாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் கூடுதல் (Top-up) கடனை பெறலாம். இத்திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் வரும் திருவள்ளுர் மாவட்ட தொழில் மையத்திற்கு இலக்காக 904 மனுதாரர்களுக்கு மானியமாக ரூ.1017.00 லட்சங்கள் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.  

13 /14

மற்ற மாவட்டத்தினர் உங்கள் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். மேலும், இத்திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள பெண்கள் உரிய ஆவணங்களான புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், விலைப்புள்ளி பட்டியலுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.  

14 /14

மேலும், பெறப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் சிறப்பு தேர்வுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு தொடர்புடைய வங்கிகளுக்கு விரைந்து அனுப்பப்பட்டு கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.