கலைஞர் உரிமைத் தொகை: இம்மாதம் சீக்கிரம் வருகிறதா ரூ.1000...? இதுதான் காரணம்!

Tamil Nadu Government: கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் அதன் பயனாளர்களுக்கு இம்மாதத்திற்கான 1000 ரூபாய் முன்கூட்டியே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியை ஒட்டி 1000 ரூபாய் வரவு வைக்கப்படுவது வழக்கமாகும்.

1 /8

தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் (MK Stalin) தொடங்கிவைக்கப்பட்டது.

2 /8

விண்ணப்பித்த தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது 1 கோடியே 14 லட்சம் பயனாளர்கள் உள்ளனர். பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்தை உறுதி செய்யும் இந்த திட்டம் பெண்கள் முன்னேற்றத்திற்கு கைக்கொடுக்கிறது.

3 /8

அடுத்த சில மாதங்களில், இன்னும் ஓரிரு லட்சம் பயனாளர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. அதாவது, இன்னும் திட்டத்தில் சேராமல் இருக்கும் தகுதிவாய்ந்த பெண்களை சேர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

4 /8

மேலும், வரும் மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதுதான் திமுகவின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விரிவாக்கம் செய்து அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

5 /8

தற்போது இத்திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் ரூ.1000 ஆயிரம் உரிமைத்தொகை அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு ஊக்கத்தொகை அதிகமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் ரூ.1500 முதல் ரூ.2000 வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 /8

வழக்கமாக மகளிருக்கு 1000 ரூபாய் வங்கிக்கணக்கில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியை ஒட்டி வரவு வைக்கப்படும். இந்நிலையில், இந்த மாதம் சற்று முன்னதாகவே மகளிர் உரிமைத்தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

7 /8

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே அதாவது ஜன.10ஆம் தேதி அன்றே 1000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இம்மாதம் சர்வதேச மகளிர் தினத்தை (International Women's Day) முன்னிட்டு மார்ச் 8ஆம் தேதியை ஒட்டி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

8 /8

இருப்பினும் இது அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை, இத்தகவலும் உறுதிசெய்யப்படவில்லை. மறுபுறம், டெல்லியில் மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பும், ஒடிசாவில் சுபத்ரா திட்டத்தின்கீழ் இரண்டாவது தவணையாக 5000 ரூபாயும் வரும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தில் வெளியாகின்றன. அதைபோல், மகளிருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) முன்கூட்டியே இம்மாத தவணையை செலுத்தலாம் என கூறப்படுகிறது.