Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான மூன்று முக்கிய ஆவணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
Kalaingar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசு ஜூன் 4 ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்ய உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான மிக முக்கிய ஆவணங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்க உள்ளது. நீண்ட நாட்களாக இந்த திட்டத்தில் சேர வேண்டும் என காத்திருந்த தமிழ்நாட்டு பெண்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதுநாள் வரை காத்திருந்தவர்கள் ஜூன் 4 ஆம் தேதிக்காக மிக ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஏனென்றால் அன்றைய நாளில் தான் தமிழ்நாடு முழுவதும் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
அன்றைய நாளில் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் இந்த சிறப்பு முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதனால், இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்களும், ஏற்கனவே விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு ஜூன் 4 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
ஆனால், இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க மூன்று முக்கிய ஆவணங்கள் கட்டாயம் தேவை. ரேஷன் கார்டு இருக்க வேண்டும். இந்த கார்டு இல்லையென்றால் கட்டாயம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.
உங்களிடம் ரேஷன் கார்டு இருக்கிறது என்றால், விண்ணப்பிப்பவரின் பெயரில் வங்கி கணக்கு இருக்க வேண்டும். வங்கி பாஸ்புக் நகலை விண்ணப்பிக்கும்போது கொடுக்க வேண்டும்.
அதன்பிறகு ஆதார் கார்டு அவசியம் கொடுக்க வேண்டும். இதுதவிர வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை கூட ஆவணமாக கொடுக்கலாம். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் அவசியம்.
எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த ஆவணங்கள் தங்களிடம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தேவைப்படுவோருக்கு உதவு செய்யவும்.