கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இவர்கள் விண்ணப்பித்தாலும் கிடைக்காது? யார் விண்ணப்பிக்கலாம்?

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரவாக்கத்தின்போது யார் விண்ணப்பித்தால் கிடைக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Kalaingar Magalir Urimai Thogai : தமிழ்நாடு பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தில் யார் விண்ணப்பிக்கலாம், யார் விண்ணப்பிக்க கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /11

தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்தப்படியே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaingar Magalir Urimai Thogai) விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார்.

2 /11

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் பெண்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தியை குறைக்கும் விதமாக இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். அதன்படியே அமைச்சர் தங்கம் தென்னரசும் பெண்களுக்கான சூப்பரான குட் நியூஸை கொடுத்துவிட்டார்.

3 /11

அதாவது இதுவரை கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறாத பெண்கள் இந்த திட்டத்துக்கு இப்போது விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது வங்கிக் கணக்குகளில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படும். 

4 /11

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்திருந்தாலும், அதில் தகுதியானவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்பதையும் அடிக்கோடிட்டு தெளிவாக கூறியுள்ளார்.  

5 /11

அதனால் இந்த திட்டத்துக்கு தகுதியானவர்கள் யார்? தகுதியில்லாதவர்கள் யார்? என்பதை பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் விண்ணப்பித்தாலும் உங்கள் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் நிராகரிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. எல்லா பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.   

6 /11

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு மட்டுமே, அந்த வீட்டு பெண்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கப்படும். மற்றவர்களுக்கு கிடைக்காது. இதற்கான சில விதிமுறைகள் இருக்கின்றன. அதனை தெரிந்து கொள்வது அவசியம்.

7 /11

ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு பெண் பயனாளி மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். குடும்ப தலைவராக கணவர் புகைப்படம் ரேஷன் கார்டில் இருந்தாலும் அந்த வீட்டு பெண் குடும்ப தலைவியாக கருதப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 21 வயது நிரம்பியவர்களாக இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.   

8 /11

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் வேறு திட்டங்களில் மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவர்கள், மக்களால் தேர்வு செய்யப்பட்டு அரசியலமைப்புக்குட்பட்ட பதவிகளில் பொறுப்பு வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள், அதாவது எம்பி, எம்எல்ஏ, மேயர், கவுன்சிலர், மாவட்ட ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்புகளில் இருப்பவர்களின் குடும்பத்தினர் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.

9 /11

5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய் நிலம் என்ற இந்த அளவுக்கு மேல் நிலங்களை வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. இதற்கு கீழான நிலம் வைத்திருப்பவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் பயனாளியாக சேர முடியாது. 

10 /11

வருமானவரி, தொழில் வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்துபவர்கள், அதாவது 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் இந்த திட்டத்தில் பயனாளியாக சேர முடியாது. ஏனையோர் இந்த திட்டத்தில் சேர்ந்து பலனடையலாம். குடும்ப தலைவியாக திருநங்கைகள் இருந்தாலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 

11 /11

குடும்ப தலைவிகள் இல்லாத குடும்பத்தில் தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் விதவைகளும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வெப்சைட் மற்றும் அருகில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு சென்று தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்.