கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிதாக விண்ணப்பிக்கப்போகிறீர்களா? முக்கிய அப்டேட்

Published: Jul 05, 2025, 05:50 AM IST|Updated: Jul 05, 2025, 05:50 AM IST

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கான முக்கிய அப்டேட் இது.

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிக்க உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அப்டேட்

1/11

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிக்க உள்ளவர்கள் ஜூலை 15 ஆம் தேதி முதல் எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும், உங்கள் பகுதியில் எங்கெல்லாம் முகாம் நடக்கும் என்பது குறித்த அப்டேட்டை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

 

2/11

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஜூலை 15 ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தடபுடலாக நடந்து வருகிறது.

 

3/11

மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அனைத்து துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். ஜூலை 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கும். இது ஒரே நாளில் நிறைவடையக்கூடிய முகாமும் அல்ல என்பதை மக்கள் நினைவில் கொள்ளுங்கள்

4/11

அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கெல்லாம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவது, அந்த முகாம் நடத்தும் இடத்தில் இருக்கும் கழிப்பறை, குடிநீர் வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்வது குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் இது தொடர்பாக முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.

 

5/11

குறிப்பாக பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கும் இடம் குறித்து முன்கூட்டியே ஊராட்சி வழியாக தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், முகாமுக்கு வரும்போது கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

6/11

அந்தவகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊராட்சி வாரியாக பல்வேறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம். 

7/11

உங்கள் பகுதியில் நடக்க இருக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்த தகவல் இதுவரை கிடைக்கப்பெற வில்லை என்றாலும், இன்னும் ஒரு சில நாட்களில் ஊராட்சிமன்றங்கள் வழியாகவும் தெரிவிக்கப்படும். எனவே பொதுமக்கள் இது குறித்து குழப்பமடைய தேவையில்லை.

 

8/11

ஒவ்வொரு கிராமத்துக்கும் அறிவிப்புகள் சென்று சேர மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 200க்கும் அதிகமான இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடக்கும்.

9/11

நீங்கள் வசிக்கும் இடத்துக்கும் மிக அருகாமையிலேயே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் பெறும் கூட்டம் நடக்கும்.

10/11

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களிடம் இருக்கும் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான தகுதிகளை பூர்த்தி செய்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

11/11

இவையெல்லாம் சரியாக இருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு தவறாமல் விண்ணப்பிக்கவும். இந்த திட்டத்தில் சேருவதற்கான நல்ல வாய்ப்பு.