கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இதை செய்யாதவர்களுக்கு ரூ. 1000 கிடைக்காது!

Published: Oct 03, 2025, 03:49 PM IST|Updated: Oct 03, 2025, 03:49 PM IST

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களில் யாருக்கெல்லாம் சிக்கல் வரும்? முழு விவரம்

 

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களில் யாருடைய விண்ணப்பங்கள் எல்லாம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

1/12

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் புதிய பயனாளிகள் யாரெல்லாம் சேர்க்கப்படபோகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது. 

2/12

இதனால் தங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுமா? நிராகரிக்கப்படுமா? என்ற அப்டேட்டை எதிர்பார்த்து லட்சக்கணக்கான பெண்கள் காத்திருக்கிறார்கள்.

 

3/12

அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ’கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் நிறைவடையவில்லை. நவம்பர் மாதம் வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது.

 

4/12

அப்போது வரை இத்திட்டத்துக்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பெண்கள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம். அதற்கு முன்பு, இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களும், விண்ணப்பிக்காதவர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அப்டேட் இருக்கிறது.

 

5/12

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க மிக மிக முக்கியமான ஆவணம் ரேஷன் கார்டு தான். இதில் தவறுகள் இருந்தால், அது கள ஆய்வில் உறுதி செய்யப்பட்டால் உங்களின் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, ரேஷன் கார்டு வைத்திருப்பதற்கும் சிக்கல் உருவாகும்.

 

6/12

அதாவது, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பலர் முகவரி மாற்றாமலேயே பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து பழைய முகவரியிலேயே ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர். அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தால், அதிகாரிகள் கள ஆய்வுக்கு வரும்போது உங்களின் இருப்பிடம் குறித்த உண்மைநிலை தெரிய வரும்.

 

7/12

அப்போது முகவரியை மாற்றுமாறு அறிவுறுத்துவார்கள். அப்படியான சூழலை எதிர்கொள்வதற்கு முன்பே ரேஷன் கார்டில் முகவரி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் தவறாக இருந்தால் அதற்கு முறையாக விண்ணப்பித்து மாற்றிக்கொள்ளவும். ஆனால், மாற்றாமல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்கள் நடைமுறை சிக்கலை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

 

8/12

இதனை தவிர்த்து, குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் எல்லாம் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக நிராகரிக்கப்பட்டுவிடும்

 

9/12

அதேபோல், அரசுப் பணியில் அண்மையில் சேர்ந்தவர்களின் குடும்ப பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்கள் இருப்பின், அவர்களுடைய விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். 

 

10/12

நிரந்தர முகவரியில் வசிப்பவர்கள், அரசின் அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்யும் பெண்கள் எல்லோருக்கும் கட்டாயம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கிடைக்கும். உங்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாது.

 

11/12

ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், மொபைல் எண் ஆகியவை மட்டும் சரியாக கொடுத்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணையே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கொடுக்க வேண்டும். 

 

12/12

எனவே, இதில் தவறு செய்தாலும், இத்திட்டத்தில் நீங்கள் சேர்க்கப்பட்டது குறித்தும் பணம் வரவு வைக்கப்படுவது குறித்த தகவலும் உங்களுக்கு கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.