Kalaignar Magalir Urimai Thogai : புதிய ரேஷன் கார்டு இவர்களின் பெயரை ரேஷன் கார்டில் சேர்த்துக் கொண்டாலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.
Kalaignar Magalir Urimai Thogai : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது சிலர் செய்த தவறுகளுக்கு அரசே முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அது என்ன என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
1/10Kalaignar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசு வெகு சிறப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விரைவில் பிரம்மாண்டமாக இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதுவரை இந்த திட்டத்தில் பயன்பெறாத தகுதியான குடும்பதலைவிகள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.
2/10ஜூலை 15 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம்.
3/10ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, புகைப்படம், வங்கி பாஸ்புக், மொபைல் எண் உள்ளிட்டவை கட்டாயம். எனவே புதியதாக இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் இந்த ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.
4/10கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு என சில விதிமுறைகள் இருக்கின்றன. முதியோர்கள், ஓய்வூதியதாரர்கள், மாற்றுத்திறனாளிகள், ஹெச்ஐவி உள்ளிட்ட வாழ்வியலை முடக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட குடும்பத்தினருக்கு சில விதிவிலக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அரசின் வேறு எந்த திட்டத்தில் பயன்பெற்றாலும் இந்த திட்டத்திலும் பயனாளிகளாக இருக்க முடியும்.
5/10அண்மையில் கூட தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தில் மூன்று விதிவிலக்குகளை அறிவித்தது. அதன்படி காலமுறை ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்களைத் தவிர, அவர்கள் வீட்டில் தகுதியான பெண்கள் இருந்தால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக உள்ள விதிமுறைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தால் அவர்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அரசு அறிவித்தது.
6/10முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களை தவிர அவர்கள் வீட்டில் இருக்கும் தகுதியான மற்ற பெண்களும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து ஒன்று நிலவி வந்தது. அது என்னவென்றால், ஓய்வூதியம் பெறுபவரின் பெயர் ரேஷன் கார்டில் இருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். இன்னும் கூட நினைத்துக் கொண்டிருப்பவர்கள் உள்ளனர்.
7/10அதனால், புதியதாக ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்கள் அத்தகைய ஓய்வூதியம் பெறும் முதியோர்களின் பெயரை தங்கள் ரேஷன் கார்டில் இணைக்க வேண்டிய சூழலில் இருக்கும்பட்சத்தில் அதனை தவிர்த்தனர். ஆனால் இதற்கு தமிழ்நாடு அரசே முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
8/10முதியோர் ஓய்வூதியத் தொகை பெற்றாலும், அந்த பயனாளியைத் தவிர தகுதியாக இருக்கும் மற்ற குடும்ப தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துவிட்டது.
9/10எனவே, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்கள், ஏற்கனவே முதியோர் பெயர்களை சேர்க்காமல் ரேஷன் கார்டு பெற்றவர்கள் அவர்களின் பெயரை ரேஷன் கார்டில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் எந்த பிரச்சனையும் இல்லை.
10/10அதேபோல் முதியோர் ஓய்வூதியம் பெறப்படுவதற்காக, தகுதி இருந்தும் இவ்வளவு நாள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காமல் இருந்தால், ஜூலை 15 ஆம் தேதி முதல் நடக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும். உங்களுடைய பெயர் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்.