கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு! அமைச்சர் கொடுத்த அப்டேட்

Kaliagnar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு குறித்த முக்கிய அப்டேட்

Kaliagnar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.

1 /12

தமிழ்நாடு அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kaliagnar Magalir Urimai Thogai) திட்டத்தில் 2ம் கட்டமாக விரிவாக்கம் செய்து புதிய பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. டிசம்பர் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற வெல்லும் பெண்கள் அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக தேர்வுசெய்யப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.  

2 /12

ஏற்கனவே, இத்திட்டத்தில் 1 கோடியே 13 லட்சம் மகளிருக்கு கடந்த 27 மாதங்களாக மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், இப்போது கூடுதலாக 16.94 லட்சம் மகளிர் புதிய பயனாளிகளாக இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.   

3 /12

இதன் மூலம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடையும் மகளிரின் எண்ணிக்கை மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 69,831 என உயர்ந்துள்ளது. எனினும், இத்திட்டத்துக்கு விண்ணப்பித்த பெண்களில் தகுதியில்லாதவர்கள் என கண்டறியப்பட்டவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.   

4 /12

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மேற்கொண்ட கள ஆய்வில், லோன் உள்ளிட்டவைகளுக்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இத்திட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.  

5 /12

அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, சொந்த தொழில் செய்வதற்காக வருமானவரி கணக்கு தாக்கல் செய்து வங்கிகளில் கடன் பெற்ற குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர்களின் விண்ணப்பங்களை அரசு நிராகரித்துள்ளது.  

6 /12

பெண்கள் விண்ணப்பிக்கும்போது கொடுத்த ஆதார் தகவல்களை வைத்து, லோன் விவரங்களை பெற்ற அரசு, அதில் வருமான வரி கணக்கு தாக்கல்  செய்தவர்களின் விவரங்களையும் கண்டுபிடித்தது. இதேபோல், மற்ற விதிமுறைகளை பூர்த்தி செய்யாதவர்களையும் அரசு கள ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறது.  

7 /12

இதனடிப்படையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களை இத்திட்டத்தில் சேர்த்தும், தகுதியில்லாதவர்களின் விண்ணப்பங்களை அரசு நிராகரித்திருக்கிறது.

8 /12

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டும் என தெரிகிறது.  

9 /12

அதேநேரத்தில் தகுதியிருந்தும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்ய வேண்டும்?, மேல்முறையீடு செய்யலாமா? என்பது குறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.  

10 /12

இதுகுறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்‌.ராமச்சந்திரன் விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.   

11 /12

தகுதியுள்ளவர்களுக்கு ரூ.1000 கொடுக்கப்பட்டிருப்பதாகவும், மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்குவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.  

12 /12

மேலும், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், ஆர்.டி.ஓ-விடம் மேல்முறையீடு செய்யலாம். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.‌ அது குறித்த விளக்கங்கள் அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்‌.ராமச்சந்திரன் தெரிவித்தார்.