கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கான முக்கிய அப்டேட்! ரூ.1000 கிடைக்குமா?

Published: Oct 05, 2025, 06:08 PM IST|Updated: Oct 06, 2025, 05:19 PM IST

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தனியாக வசிக்கும் பெண்கள் பயனாளியாக முடியுமா? விவரம் இங்கே

 

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் குடும்பம் இல்லாமல் தனியாக வசிக்கும் பெண்கள் பயனாளியாக முடியுமா? அதற்கான விதிமுறைகள் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

1/10

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாடு அரசால் பெண்களுக்காகவே நடைமுறைப்படுத்தப்படும் திட்டம். 

 

2/10

மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் இத்திட்டத்தின் கீழ் அவர்களது வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இப்போது வரை 1.15 கோடி பெண்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக இருக்கின்றனர்.

3/10

புதியவர்கள் இத்திட்டத்துக்கு இப்போது விண்ணப்பிக்கலாம். அதாவது கடந்த முறை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்படாமல் விடுப்பட்டவர்கள், எல்லா தகுதிகள் இருந்து புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் இப்போது விண்ணப்பிக்கலாம். 

 

4/10

அதாவது அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள் குடும்பத்தில் ஓய்வூதியம் பெறுபவரை தவிர்த்து மற்ற தகுதியான பெண்கள் இருப்பின் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

5/10

மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அரசு கொடுத்திருக்கும் விதிமுறைகள் தளர்வுகளின்படி, புதிதாக தகுதி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 

 

6/10

அதேபோல், பிற ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பத்திலும் ஓய்வூதியம் பெறுபவர்களை தவிர்த்து மற்ற தகுதியான பெண்கள் இருப்பின் அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

 

7/10

இந்த தகவலை எல்லாம் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இருப்பினும் ஒரு முக்கியமான தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். குடும்பம் இல்லாத தனியாக வசிக்கும் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியுமா? என்றால் முடியும்.

 

8/10

ஆனால், அந்த பெண் ரேஷன் கார்டு பெற்றிருக்க வேண்டும். இதுவரை பெறவில்லை என்றால் தனியாக வசிக்கிறேன் என்பதற்கான மனு கொடுத்து ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். குறைதீர் முகாம்களில் நேரடியாக சென்றும் முறையிடலாம்.

 

9/10

அரசு அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி முறைப்படி ரேஷன் கார்டு பெற்ற பிறகு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

 

10/10

ரேஷன் கார்டு தான் அடிப்படையே. பெண்கள் யாராக இருந்தாலும் ரேஷன் கார்டு இருந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான  விதிமுறைகளை பூர்த்தி செய்தால் கட்டாயம் உங்களுக்கு ரூ.1000 கிடைக்கும்.