கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : 3 முக்கிய அப்டேட்டுகளை கொடுத்த முதலமைச்சர்

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முதலமைச்சர் கொடுத்திருக்கும் 3 முக்கிய அப்டேட்டுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்திருக்கும் மூன்று முக்கிய அப்டேட்டுகளை தெரிந்து கொள்ளுங்கள்

 

1 /8

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு சூப்பர் வாய்ப்பு வழங்கியுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி முதல் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

2 /8

தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இந்த திட்டம் சரியான பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் கூடுதலாக 3 அறிவிப்புகளையும் வெளியிட்டார். அந்த அறிவிப்பின் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

3 /8

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏழை, எளிய மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியான பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கிறது தமிழ்நாடு அரசு. அத்துடன் இதில் ஏழை மக்கள் பயனடைகிறார்களா என்பதையும் அரசு கண்காணித்து வருகிறது.   

4 /8

அதன் ஒருபகுதியாக இம்முறை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு உரிய சரியான பயனாளிகள், இதுவரை இந்த திட்டத்தில் சேராமல் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு, பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று இந்த திட்டத்தில் சேருவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

5 /8

தஞ்சாவூரில் பேசிய முதலைமச்சர் மு.க.ஸ்டாலின், தகுதியான பெண்கள் இந்த திட்டத்தில் பயனடைய வேண்டும் என்பதற்காக, இந்த திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காதவர்களின் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் சென்று எப்படி விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும் என வழிகாட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.  

6 /8

அதன்படி, தகுதியான பெண்கள் ஜூலை 15 ஆம் தேதி முதல் நடக்கும் மக்களுடன் முதல்வர் முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். எனவே, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என தெரியாமல் இருந்த மக்களுக்கும் இப்போது முதலமைச்சர் நல்ல செய்தியை அறிவித்துள்ளார்.

7 /8

அதனால், வயதானவர்கள், ஏழை எளிய பெண்கள் யாரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க இருப்பதையே முதலமைச்சரின் அறிவிப்பு காட்டுகிறது. பொதுமக்களும் தங்களுக்கு தெரிந்த தகுதியான பெண்கள் இந்த திட்டத்தில் சேராமல் இருந்தாலும் அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு வழிகாட்டவும். 

8 /8

முதலமைச்சரின் மூன்று அறிவிப்புகள் : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். ஜூலை 15 முதல் உங்கள் பகுதியில் நடக்கும் மக்களுடன் முதல்வர் முகாமில் நீங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம். விண்ணப்பிக்க தெரியாதவர்களுக்கு தன்னார்வலர்கள் வீடுகளுக்கே சென்று வழிகாட்டுவார்கள். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.