Kalaignar Magalir urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
Kalaignar Magalir urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்த பெண்களுக்கு முதலமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir urimai Thogai) திட்டத்தில் விரைவில் புதிதாக விண்ணப்பித்த பெண்கள் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட உள்ளனர்.
இதற்காக ஜூலை மாதம் முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் பெற்று வந்த தமிழ்நாடு அரசு பெரும்பாலான மாவட்டங்களில், அந்த முகாமை நிறைவு செய்துவிட்டது.
வரும் வெள்ளிக்கிழமை, அதாவது நவம்பர் 14 ஆம் தேதியுடன் அனைத்து மாவட்டங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைய உள்ளது. அத்துடன், மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட காலவகாசமும் நிறைவடைகிறது.
இதுவரை 28 லட்சத்துக்கும் அதிகமானோர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன
இந்த சூழலில் புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இப்போது புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியான பெண்கள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கட்டாயம் கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.
ஏற்கனவே டிசம்பர் 15 ஆம் தேதி முதல் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கப்படும் என துணை முதலமைச்சர் அறிவித்த நிலையில், இத்திட்டம் விரிவாக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
எனவே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியான பெண்களுக்கு இம்முறை மாதம் 1000 ரூபாய் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
ஊராட்சி வாரியாக தகுதியான பெண்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலர் தலைமையிலான குழு பயனாளிகளை இறுதி செய்கிறது.