கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்..!!

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர்  உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

1 /10

கலைஞர்  மகளிர் உரிமைத்தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டம் தமிழ்நாட்டில் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி இதற்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடக்க உள்ளது.  

2 /10

மக்களுடன் முதல்வர் என்ற அந்த சிறப்பு திட்ட முகாமில் இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளியாக இல்லாத பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

3 /10

ஏற்கனவே இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். 

4 /10

அப்படி விண்ணப்பிக்கும்போது, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்ட அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும் குடும்ப தலைவியின் பெயரில் இருக்கும் வங்கி பாஸ்புக், மொபைல் எண் கட்டாயம் வேண்டும். 

5 /10

ஆதார் அட்டை மட்டும் இருந்து குடும்ப அட்டை இல்லாதவர்களாக இருப்பின் கட்டாயம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. 

6 /10

எனவே, இதுவரை குடும்ப அட்டை பெறாதவர்கள் முதலில் குடும்ப அட்டை பெற்று பின்னர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணபிக்கவும். 

7 /10

அதேபோல், விண்ணப்பிக்கும் முன் நீங்கள் தமிழ்நாடு அரசால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டவரா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.   

8 /10

இல்லையென்றால் கலைஞர் உரிமைத் திட்டத்தில் நீங்கள் பயனாளியாக தேர்வுசெய்யப்படமாட்டீர்கள். உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். பொருள் வாங்கும் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும். 

9 /10

குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு மிகாமல் நன்செய் நிலங்களும், 10 ஏக்கருக்கு மிகாமல் புன் செய் நிலங்களும் இருந்தால் கூட விண்ணப்பிக்கலாம். நோய்வாய்ப்பட்ட சிலருக்கு சிறப்பு விலக்குகள் இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  

10 /10

அதேநேரத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் ஊராட்சிமன்ற தலைவர், கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி, நகர்மன்ற தலைவர் ஆகியோரின் குடும்பத்தினர் இந்த திட்டத்தில் பயனாளியாக இருக்க முடியாது. மத்திய மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் குடும்பத்தினரும் இந்த திட்டத்தில் சேர முடியாது.