அரசு ஊழியர்களாக இருந்தவர்களின் குடும்ப பெண்களுக்கு வரப்போகும் குட் நியூஸ்!

Kalaignar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்த குடும்ப பெண்களுக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரப்போகிறது.

 

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்த குடும்ப பெண்களுக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரப்போகிறது

 

1 /10

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

2 /10

தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு என்னவென்றால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் இறுதிப்பட்டியல் வெளியாகும் என்பது தான்.  

3 /10

இத்திட்டத்துக்கு 28 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் இதுவரை புதிதாக விண்ணப்பித்துள்ளனர். ஆனால், எல்லோருடைய விண்ணப்பங்களும் ஏற்கப்படாது.

4 /10

அனைத்து விண்ணப்பங்களும் கள ஆய்வு மூலம் இறுதி செய்யப்பட்டு, அதில் தகுதியான பெண்களை மட்டுமே தமிழ்நாடு அரசு தேர்வு செய்யும்.   

5 /10

கடந்த முறையும் இதே வழிமுறையை பின்பற்றியே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளை தமிழ்நாடு அரசு தேர்வு செய்தது. இப்போது 1.15 கோடி பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக இருக்கின்றனர்.  

6 /10

இந்த எண்ணிக்கை விரைவில் உயரப்போகிறது. அதிக நாட்கள் எல்லாம் இல்லை. நவம்பர் மாத இறுதிக்குள் முழு பயனாளிகளின் பட்டியலும் இறுதியாகும். டிசம்பர் முதல் வாரத்தில் புதிய பயனாளிகளின் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.  

7 /10

அதாவது தகுதியான பெண்களுக்கு இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக அரசு தெரிவிக்கும். இதில், இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இம்முறை தமிழ்நாடு அரசின் ஊழியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்களின் குடும்ப பெண்களும் இம்முறை மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர்.  

8 /10

அவர்களுக்காக அரசு விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக காலமுறை ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்ப பெண்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.  

9 /10

அதாவது, ஓய்வூதியம் பெறுபவர்கள் பெண்களாக இருப்பின் விண்ணப்பிக்க முடியாது. அதே குடும்பத்தில் இன்னொரு பெண் இருப்பின் அவர் விண்ணப்பிக்கலாம். அதன்படி பலரும் விண்ணப்பித்திருக்கிறார்கள்  

10 /10

அவர்கள் எல்லோருக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இன்னும் சில வாரங்களில் மகிழ்ச்சியான செய்தி வரப்போகிறது. அவர்களுக்கும் மாதம் ரூ.1000 கிடைக்கப்போகிறது.