Kalaignar Magalir Urimai Thogai : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் 'மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
வருகிற ஜூலை 15 ஆம் தேதி முதல் 'மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தற்போதைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
1/9தமிழ்நாடு அரசு வெகு சிறப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விரைவில் பிரம்மாண்டமாக இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதுவரை இந்த திட்டத்தில் பயன்பெறாத தகுதியான குடும்பதலைவிகள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.
2/9வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம்.
3/9கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான சமூக நலத் திட்டமாகும். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது.
4/92023 செப்டம்பர் 15 முதல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், தமிழ்நாட்டில் சுமார் 1.16 கோடி பெண்கள் முதல்கட்டமாக பயனடைந்தனர். மேல்முறையீடு மூலம் 1.48 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.
5/9மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவோர், விதவை ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்டவர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6/9இந்த திட்டத்திற்காக 2023-24 நிதியாண்டில் 8,123.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து 2024-25 நிதியாண்டில் 13,722.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
7/9தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக 9 முதல் 10 மாத காலமே உள்ள நிலையில் புதிய பயனாளிகளை சேர்க்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் மூன்று மாதங்களுக்குள் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விடுபட்டவர்களுக்கு ஆகஸ்ட் 2025 முதல் தொகை வழங்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
8/9ஜூலை 15 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ‘மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்’ முகாம்கள் தொடங்க உள்ளது. இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம் விநியோகம் தொடங்கப்படவுள்ளது.
9/9‘மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டமானது நகரப் பகுதிகளில் 3768 முகாம்கள், கிராமப் பகுதிகளில் 6232 முகாம்கள் என்று மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளது. நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகள், திட்டங்கள் உங்களைத் தேடி வரும், இதுவே, கிராமப் பகுதிகளில் 14 அரசுத் துறைகளின் 46 சேவைகளை பெறலாம்.