Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி தெரிந்து கொள்ளுங்கள்
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் எங்கு கிடைக்கும், இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் எப்போது வரை விண்ணப்பிக்கலாம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி எது? என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
1/10கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிக்க காத்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு இரண்டு குட் நியூஸ் வெளியிட்டிருக்கிறது என்று கூட சொல்லலாம்.
2/10கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் ஜூலை 15 ஆம் தேதி நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மட்டுமே கிடைக்கும். அதனால் மக்கள் இந்த முகாமில் தவறாமல் கலந்து கொண்டால் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.
3/10அதேநேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணபிக்க கடைசி தேதி என்ன என்ற தகவலும் அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
4/10அதாவது, இது குறித்து அரசு கொடுத்துள்ள விளக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் எவ்வளவு நாட்களுக்கு நடக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது. அந்த முகாம் நடக்கும் வரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கும் விண்ணப்பிக்கலாம்.
5/10உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தொடங்கும் தேதி ஜூலை 15. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதேநேரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் பத்தாயிரம் இடங்களில் இந்த முகாம் நடக்கும். ஊராட்சி வாரியாக அனைத்து பகுதிகளிலும் இந்த முகாம் நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
6/10நவம்பர் மாதம் இறுதி வரை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடக்கும். எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
7/10கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் இரண்டாவது குட் நியூஸ் இதுதான். அதனால், ஆவணங்கள் ஏதேனும் இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து, அதனை அரசிடமிருந்து பெற்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
8/10போதுமான காலவகாசம் பொதுமக்களுக்கு அரசிடமிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அவசரப்படாமல் பொறுமையாக விண்ணப்பிக்கவும். அதேநேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் முதல் கட்ட விரிவாக்கம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் இருக்க வாய்ப்புள்ளது.
9/10இதில் ஏற்கனவே விண்ணப்பத்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் தகுதியான பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
10/10புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை எல்லாம் நிறைவடைந்த பிறகு எப்போது ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்பதை அரசு விரைவில் அறிவிக்கும்.