கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ரேஷன் கார்டு முகவரியால் வரப்போகும் சிக்கல்..!

Published: Jul 07, 2025, 05:05 PM IST|Updated: Jul 07, 2025, 05:19 PM IST

Kalaignar Magalir Urimai Thogai : ரேஷன் கார்டு முகவரியால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கும்போது சிக்கல் வரலாம்.

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு முகவரியால் வரப்போகும் சிக்கல் குறித்து இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

 

1/12

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு முகவரியால் என்ன சிக்கல் வரும் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம். 

2/12

லட்சகணக்கான தமிழ்நாட்டு பெண்கள் எதிர்பார்த்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம் விரைவில் நடக்கப்போகிறது. தமிழ்நாடு அரசு அதற்கான அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

3/12

ஜூலை 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். சிலருக்காக அரசு இம்முறை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விதிமுறைகளிலும் தளர்வுகளை அறிவித்திருக்கிறது.

4/12

அதன்படி, காலமுறை ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான தகுதிகளை பூர்த்தி செய்தால் இம்முறை விண்ணப்பிக்கலாம். ஓய்வூதியம் பெறுபவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அவர்களைத் தவிர தகுதியான குடும்பத்தில் உள்ள மற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். 

5/12

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் கிடைக்கும். இதுதவிர அரசு சார்பில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களின் வீடுகளுக்கே வந்து விண்ணப்பத்தைக் கொடுத்து, அந்த விண்ணப்பத்தை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும், இணைக்க வேண்டிய ஆவணங்கள் என்ன என்பது குறித்து முழு வழிகாட்டலையும் கொடுப்பார்கள்.

6/12

இந்த பணிகள் இன்று முதல் தமிழ்நாட்டில் தொடங்கியது. தமிழ்நாடு அரசின் தன்னார்வலர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தை தகுதியான பயனாளிகளுக்கு விநியோகிக்க தொடங்கினர்.

7/12

ஆனால், இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் நிரந்தர குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தற்போதைய வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு அதற்கான ஆவணங்களை சரியாக வைத்திருப்பவர்களுக்கும் பிரச்சனை வராது.

8/12

யாருக்கு பிரச்சனை என்றால், பல வருடங்களுக்கு முன்பு ஓர் ஊரில் வாடகை வீட்டில் வசிக்கும்போது, அந்த வீட்டின் முகவரியில் ரேஷன் கார்டு பெற்று இருப்பவர்களுக்கு சிக்கல் வரலாம். ஏனென்றால் இப்போது அவர்கள் அந்த வீட்டில் வசித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

9/12

இப்போது ஓர் ஊரில் வாடகை வீட்டில் வசிப்பார்கள். ரேஷன் பொருட்களை மட்டும் முன்பு இருந்த நியாயவிலைக் கடைக்கு சென்று வாங்கிக்கொண்டிருப்பார்கள். அப்போது அதே ரேஷன் கார்டை வைத்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கும் விண்ணப்பிப்பார்கள்.

10/12

அப்படியானவர்களை, அதிகாரிகள் கள ஆய்வில் கண்டுபிடித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ரேஷன் கார்டில் உள்ள முகவரியில் இல்லாதவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். இது குறித்து அதிகாரிகள் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும். 

11/12

எனவே, ரேஷன் கார்டு முகவரி மாற்றாதவர்கள் உடனடியாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்கவும். பின்னர் சரியான ரேஷன் கார்டு முகவரியில் இருந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும். நவம்பர் 30 ஆம் தேதி வரை காலவகாசம் இருக்கிறது. 

 

12/12

அவசரப்படாமல் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும், உங்களின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது. தவறான தகவல் இருந்தால் நிராகரிக்கபடும்.