கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ரேஷன் கார்டில் மனைவி பெயர் இல்லாவிட்டாலும் ரூ.1000 பெறலாம் - ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க..!!

Kalaingar Magalir Urimai Thogai : ரேஷன் கார்டில் மனைவி பெயர் இல்லாவிட்டாலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறலாம். 

 

Kalaingar Magalir Urimai Thogai : ரேஷன் கார்டில் மனைவி பெயர் இல்லாவிட்டாலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளியாக சேர முடியும். எப்படி? விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /10

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வெகு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வகை உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்த திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு சுமார் 1 கோடியே 15 லட்சம் பேர் பயனாளிகளாக இருக்கின்றனர். 

2 /10

விரைவில் புதிய பயனாளிகள் தேர்வு செய்யபட இருக்கின்றனர். அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணபங்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்வு செய்யப்பட்ட புதிய பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சம் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் முதல் புதிய பயனாளிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படலாம்.

3 /10

இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணிப்பிக்காதவர்கள் கூட அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். அதற்கு முன்பு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான தகுதிகள் மற்றும் விதிமுறைகளை பார்த்து தெரிந்து கொள்வது அவசியம். ஒருவேளை உங்களுக்கு தகுதியிருந்தால் விண்ணப்பம் ஏற்கப்படும், இல்லையென்றால் நிராகரிக்கப்படும். 

4 /10

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், வருமானவரி செலுத்துபவர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், வார்டு உறுப்பினரைத் தவிர ஊராட்சிமன்ற தலைவர், கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், 5 ஏக்கருக்கு மேல் நன்செய், 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.

5 /10

இதுதவிர அரசின் ஓய்வூதிய திட்டங்களில் பயன்பெறுபவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது. அதேநேரத்தில் எய்ட்ஸ், முதுகு தண்டுவட நோய், பார்க்கின்சன் நோய் உள்ளிட்ட வாழ்வியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மற்றும் குடும்பத்தினர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறலாம். 

6 /10

சர்க்கரை மற்றும் அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். திருநங்கைகள் தலைமையிலான குடும்பங்கள் இருந்தால் அவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறலாம்.

7 /10

ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் பெயர் இருந்தாலும் அந்த கார்டில் இருக்கும் தகுதியான மகளிர் பெயர் இருந்தால் அவர்கள் குடும்பத் தலைவியாக கருதப்பட்டு கலைஞர் மகளிர்உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். 

8 /10

குடும்பத்தலைவி பெயர் ரேஷன் கார்டில் இல்லை என்றால், அந்த குடும்பத்தில் 21 வயது பூர்த்தியடைந்த மற்றொரு மகளிர் பெயர் இருந்தால் அவர்கள் குடும்பத் தலைவியாக கருதப்படுவர்.

9 /10

அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறலாம். ஒரு ரேஷன் கார்டில் ஒரு தகுதியானவருக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். திருமணம் ஆகாத பெண்களின் தலைமையில் குடுமங்கள் இருந்தாலும் அவர்களும் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற முடியும். எனவே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விதிமுறைகளை முழுமையாக படித்து, தேவைப்படுவோருக்கு இந்த தகவலை தெரிவிக்கவும்.

10 /10

பலர் இந்த திட்டத்திற்கு தகுதியிருந்தும் விண்ணப்பிக்காமல் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த தகவல் பேருதவியாக இருக்கும். இதுதவிர இன்னும் சில விதிமுறைகள் மற்றும் விதிவிலக்குகளும் இருக்கின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) வெப்சைட்டுக்கு சென்று திட்டம்பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.