kalaignar magalir urimai thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தில் தவறாமல் பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
kalaignar magalir urimai thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள், தவறாமல் பூர்த்தி செய்ய வேண்டிய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (kalaignar magalir urimai thogai) திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள், முழுமையாக இடம்பெற வேண்டிய தகவல்கள், என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் என்பது குறித்து கட்டாயம் தெரிந்து கொள்வது அவசியம்.
ஏனென்றால் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் செய்யகூடிய சிறிய தவறும், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்கிறது. ஜூன் 4 ஆம் தேதி முதல் புதிதாக விண்ணப்பிக்கலாம். இதற்காக தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 9000 சிறப்பு முகாம்களை நடத்துகிறது.
மக்களுடன் முதல்வர் என்ற பெயரில் நடக்கும் இந்த முகாமில் கலந்து கொண்டு இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு தாலுகாவிலும் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாம் நடக்கும். உங்கள் ஊரில் தாலுகா அலுவலகத்தில் விசாரித்தால் முகாம் நடக்கும் இடத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் கொடுக்கப்படும். அதில் நீங்கள் விண்ணப்பதாரரின் பெயர், ஆதார் எண், குடும்ப அட்டை எண், திருமண நிலை, தொலைபேசி எண், தற்போது வசிக்கும் முகவரி, சொந்த வீடா, வாடகை வீடா, மாவட்டம், மின் இணைப்பு எண், கேஸ் புக் பில், வங்கியின் பெயர், கிளையின் பெயர், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் அதில் குறிப்பிடப்பட வேண்டும்.
விண்ணப்பத்துடன் தேவையான நகல் (ஜெராக்ஸ்) ஆவணங்கள் இணைப்பது குறித்தும் அதிகாரிகள் அறிவுறுத்துவார்கள். அதன்படி இணைக்க வேண்டும். உதாரணமாக, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வங்கி பாஸ்புக் நகல், மின் இணைப்பு ரசீது, கேஸ் புக் ரசீது (தேவைப்பட்டால்) ஆகியவை இணைக்க வேண்டியிருக்கும்.
ஒரிஜினல் ஆவணங்களையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் விண்ணப்பம் நிலை குறித்து ஆன்லைனிலும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு நீங்கள் உங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (kalaignar magalir urimai thogai) விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் வங்கி பாஸ்புக்கில் இருக்கும் மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும். நிராகரிக்கப்பட்டாலும் மெசேஜ் வரும். தவறான மொபைல் எண், வங்கி கணக்கு எண்களை கொடுத்தால் நீங்கள் மீண்டும் அலைய வேண்டியிருக்கும். விண்ணப்பதாரரின் வங்கி பாஸ்புக், மொபைல் எண் கணவருடையதாக கூட இருக்கலாம்.