கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம்..!!

kalaignar magalir urimai thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய இரண்டு விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்

1 /9

kalaignar magalir urimai thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க பல விதிமுறைகளை தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ளது. அந்த விதிமுறைகளின் கீழ் உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர முடியும்.  

2 /9

மற்றவர்களின் விண்ணப்பங்கள் கட்டாயம் நிராகரிக்கப்படும். அந்த வகையில், ஏற்கனவே தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.

3 /9

இந்த விதிமுறையை தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லாதவர்கள் என்ற அம்சத்தின் கீழ் கொடுத்துள்ளது.  

4 /9

அதேநேரத்தில், சில ஓய்வூதிய திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு விலக்கு கொடுத்திருக்கிறது. இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.  

5 /9

தமிழ்நாடு அரசு விதிப்படி, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளது.

6 /9

அதேபோல், வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்றும் விளக்கியுள்ளது.

7 /9

எனவே, தவறான தகவல்களை நம்பி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு இதுவரை இத்தகைய குடும்பத்தினர் விண்ணப்பிக்காமல் இருந்தால் உடனடியாக விண்ணப்பிக்கவும். 

8 /9

பலர் ஓய்வூதியம் பெற்றாலே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். 

9 /9

இந்த தகவல் தெரிந்தவர்கள், அறியாமல் இருக்கும் தகுதியான ஏழை எளிய பயனாளிகளுக்கும் தெரியப்படுத்தவும். அந்த குடும்பத்தினர் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற முடியும்.