Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க இருக்கும் ஒரு வழியை இப்போது பார்க்கலாம்
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிக்க முடியுமா? அதற்கான வழி ஏதேனும் இருக்கிறதா? என்பதை இங்கே பார்க்கலாம்.
1/9தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக அரசால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் விரைவில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர்.
2/9அவர்களுக்கு எல்லாம் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் அவரவர் வங்கிக் கணக்குகளில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது. இதனை துணை முதலமைச்சர் உயநிதி ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிவித்துவிட்டார்.
3/9இதனால், மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்த பெண்களின் விண்ணப்பங்களை கிராம வாரியாக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
4/9அதில் தகுதியான பயனாளிகளைக் கண்டறிந்து அவர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு ரூ.1000 மாதம் மாதம் வழங்கப்படும். ஒருவேளை இதுவரை தகுதியான பெண்கள் யாரேனும் விண்ணப்பிக்காமல் இருந்தால் உங்கள் மாவட்டத்தில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு உடனடியாக விண்ணப்பிக்கவும்.
5/9நவம்பர் 14 ஆம் தேதியுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக நிறைவடைய உள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில் அனைத்து முகாம்களும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன.
6/9எஞ்சியிருக்கும் மாவட்டங்கள், அதாவது இன்னும் என்னென்ன மாவட்டங்களில் முகாம் நடத்தப்பட உள்ளது என்ற விவரத்தை ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ வெப்சைட்டில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய மாவட்டத்தில் முகாம்கள் இன்னும் நடக்கிறதா? அல்லது எல்லாம் முகாம்களும் நிறைவடைந்துவிட்டதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
7/9ஒருவேளை முகாம்கள் இன்னும் நடைபெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தால், குறிப்பிட்ட தேதியில் நடக்கும் முகாமில் கலந்து கொண்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும்.
8/9ஒருவேளை உங்களுடைய மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நிறைவடைந்திருந்தால், இன்னொரு வழி இருக்கிறது. அதாவது, வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு மனு கொடுக்கலாம்.
9/9அதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் பரிசீலித்து உரிய முடிவை தெரிவிப்பார்கள். இவ்வளவு நாட்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க அரசு கொடுத்த வாய்ப்பை தவறவிட்டவர்கள், இந்த முயற்சியை செய்து பார்க்கலாம்.