கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : நிலம் வைத்திருப்பவர்களுக்கு புதிய குட் நியூஸ்!

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு இருக்கும் முக்கிய சலுகையை தெரிந்து கொள்ளுங்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் முக்கிய சலுகை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

1 /9

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பொதுமக்கள் இதை தெரிந்து கொண்டு பலன் பெறவும். இப்போது புதிய அப்டேட் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்

2 /9

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் அண்மையில் மூன்று தளர்வுகளை அறிவித்தது. இதன் மூலம் காலமுறை ஓய்வதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள் உள்ளிட்டோர் இனி இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்.  

3 /9

இவர்கள் எல்லாம் ஜூலை 15 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். உரிய தகுதிகள் இருந்தால் அரசு அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும். 

4 /9

அதேநேரத்தில் இன்னும் சில தளர்வுகளும் ஏற்கனவே இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது. 

5 /9

இந்த வரைமுறைக்குள் வரும் குடும்பத்தினர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், விண்ணப்பிக்கும்போது வருமானவரிச் சான்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை. 

6 /9

அதேபோல் தான் நிலம் வைத்திருப்பவர்களுக்கும் தமிழ்நாடு அரசு தளர்வு ஒன்றை கொடுத்திருக்கிறது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 5 ஏக்கர் நன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், 10 ஏக்கர் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

7 /9

ஆனால், அவர்கள் நில உச்ச வரம்புக்கான ஆவணங்கள் ஏதும் இணைக்கத் தேவையில்லை. இந்த தகவல் நிலம் வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தியாகும்.

8 /9

அதேநேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இருக்கும் பிற விதிமுறைகளையும் நிலம் வைத்திருப்பவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஜூலை 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

9 /9

ஆனால், தவறான தகவல் கொடுத்து விண்ணப்பித்தால், அதிகாரிகளின் கள ஆய்வின்போது உண்மை கண்டுபிடிக்கப்பட்டால், நிலம் வைத்திருப்பவர்களின் விண்ணப்பம் கட்டாயம் நிராகரிக்கப்படும்.