மகளிர் உரிமைத்தொகை : வராத அப்டேட்! சர்பிரைஸ் கொடுக்கப்போகும் தமிழ்நாடு அரசு

kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முக்கிய அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

 

kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு விரைவில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட உள்ளது.

1 /12

தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்கள், அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  

2 /12

அதவாது, நாங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளோம் என்ற அறிவிப்பை அரசு எப்போது வெளியிடும், அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு எப்போது முதல் ரூ.1000 வழங்கப்படும்? என்ற கேள்விகளுக்கு விடையை தேடத் தொடங்கியுள்ளனர்.  

3 /12

இதுதொடர்பான பேச்சு பொதுமக்களிடையே எழத் தொடங்கியிருப்பதை அறிந்த தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தலுக்கான உத்தியாக திமுக பயன்படுத்துகிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.  

4 /12

அத்துடன், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சில மாதங்களில் மீதமுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி மீண்டும் மீண்டும் தமிழக மகளிரை ஏமாற்ற முயற்சிப்பது ஏன்? என்றும் கேட்டுள்ளார்.  

5 /12

இந்த விஷயம் இப்போது அரசியல் தளத்தில் எதிரொலிக்க காரணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்த பெண்களுக்கு, தங்களின் விண்ணப்ப நிலை குறித்த அப்டேட் தெரியாமல் இருப்பதால், தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பித்திருக்கும் பெண்கள் இது குறித்து முனுமுனுக்க தொடங்கியுள்ளனர்.  

6 /12

குறைந்தபட்சம், விண்ணப்பங்களின் மீதான பரிசீலனை தொடங்கிவிட்டது, பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை அதிகாரிகள் தொடங்கிவிட்டார்கள் என அமைச்சர்கள் அல்லது அரசு உயர் அதிகாரிகள் இதுதொடர்பான அப்டேட்டை கொடுத்தால் இந்த முனுமுனுப்புகள் இருக்காது.  

7 /12

அதுகுறித்து ஏதும் தெரியாமல் இருப்பதாலேயே பெண்கள் தங்களுக்குள் பலவாறு பேசிக்கொள்ள தொடங்கியுள்ளனர். தேர்தல் வரை இப்படியே சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள் என்றும் பேசுகின்றனர்.

8 /12

ஆனால், நவம்பர் மாதம் வரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் எல்லாம் படிப்படியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகள் இறுதி செய்யப்படுவார்கள், அதன்பிறகு அரசு சார்பில் இருந்து இறுதிப் பட்டியல் வெளியாகும் என்ற அப்டேட் வெளியானால்கூட மக்கள் அமைதி காப்பார்கள்.

9 /12

பெண்கள் மத்தியில் இத்திட்டம் குறித்து நம்பிக்கை இல்லாமலும் இல்லை. ஏனென்றால், இப்போது வரை தங்களுக்கு அருகாமையில் இருக்கும் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1000 மாதந்தோறும் வாங்கிக் கொண்டிருப்பதால், எப்படியும் தங்களும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

10 /12

ஆனால், தங்களின் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இப்போது மேலோங்கியிருக்கிறது. 

11 /12

ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்குள் அனைத்து மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களும் இறுதி செய்யப்பட்டு, பயனாளிகளின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு, அப்போதே ஆயிரம் ரூபாய் அவர்களுக்கும் விடுவிக்கபடும் என்ற அறிவிப்பு வெளியானால், பெண்கள் நிச்சயம் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்கள். 

12 /12

எதிர்வரும் இந்த  தீபாவளியையும் இன்னும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். எனவே, தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் தொடர்பான விளக்கத்தை விரைவில் கொடுக்கும் என பெண்கள் காத்திருக்கின்றனர்.