கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: யார் யாருக்கு இணைய வாய்ப்பு இருக்கிறது

Kalaignar Magalir Urimai Thogai Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைவதற்காக தகுதிப் பட்டியலில் தளர்வுகளை உருவாக்கியுள்ளது தற்போது தமிழ்நாடு அரசு.

Kalaignar Magalir Urimai Thogai Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இந்த முறை மேலும் பல பெண்கள் திட்டத்தில் பயனாளர்களாக இணைய உள்ளனர். இதன் முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

1 /8

தமிழ்நாடு அரசு வெகு சிறப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2023 செப்டம்பர் 15 முதல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், தமிழ்நாட்டில் சுமார் 1.16 கோடி பெண்கள் முதல்கட்டமாக பயனடைந்தனர். மேல்முறையீடு மூலம் 1.48 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.

2 /8

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான சமூக நலத் திட்டமாகும். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது.

3 /8

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவோர், விதவை ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்டவர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4 /8

வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் 45 நாள்களில் திட்டத்தில் இணைந்து விடலாம். தமிழக அரசு புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.

5 /8

அரசு துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று தற்போது ஓய்வூதியம் பெறும் குடும்பங்களை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் அல்லாத பிற பெண்கள் இத்திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 

6 /8

அரசு மூலமாக மானியம் பெற்று நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்தில் இணைவதற்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

7 /8

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியம் பெறாத பிற பெண்கள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

8 /8

கணவரால் கைவிடப்பட்ட, 50 வயதுக்கு மேலாகியும் திருமணம் ஆகாத பெண்கள், ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள மற்ற பெண்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.