Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 1 கோடி பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது என்பதால் அனைவருக்கும் ரூ.1000 கிடைக்குமா? என்பதை தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தில் தாங்களும் பயனாளியாக சேர வேண்டும் என்பது தமிழ்நாட்டு பெண்களின் பெரும்பான்மையோரின் எதிர்பார்ப்பும் விருப்பமாக இருக்கிறது.
ஏற்கனவே சுமார் 1 கோடியே 14 லட்சம் பேர் பயனாளியாக இருக்கும் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு இரண்டாம் கட்டமாக விரிவுபடுத்துவதாக அறிவித்துவிட்டது. ஜூன் 4 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 9000 சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
அப்போது, அந்தந்தப் பகுதிகளில் நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு இந்த திட்டத்தில் இதுவரை பயனாளிகளாக இல்லாதவர்கள், ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அதாவது. லட்சகணக்கானோர் தங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என வருத்தத்தில் இருந்ததுடன், தொடர்ச்சியாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரிடம் இதை புகார்களாக தெரிவித்தனர். தகுதிகள் இருந்தும் தாங்கள் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்தே தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவுபடுத்துகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏற்கனவே தமிழ்நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் உள்ளன.
அவற்றில் சரிபாதி ரேஷன் கார்டுகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை வைத்திருப்பவர்களில் 1 கோடி பேர் பயனாளியாக இல்லை.
இதுதவிர கடந்த மூன்று ஆண்டுகளில் பலர் குடும்ப அட்டை புதிதாக வாங்கியிருக்கிறார்கள். அவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பார்கள்.
அந்தவகையில் பார்க்கும்போது சுமார் 70 லட்சம் முதல் 1 கோடி பேர் வரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் புதிதாக இணைவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. ஆனால், விண்ணப்பித்த அனைவருக்கும் உறுதியாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது.
அரசு அதிகாரிகள் விண்ணப்பதாரரின் ஆவணங்களின் உண்மைத் தன்மை, இருப்பிடம், வருமானம், சொந்த நிலம் இருப்பு ஆகிய காரணிகளை நேரடியாக ஆய்வு செய்து அதனடிப்படையிலேயே விண்ணப்பங்கள் ஏற்பதும், நிராகரிப்பதும் முடிவெடுக்கப்படும். அதனால், சரிபாதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவே அதிக வாய்ப்பு இருக்கிறது.
இருப்பினும் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், இத்தனை விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளை இறுதி செய்வதற்கு அரசுக்கு நீண்ட காலம் தேவைப்படும். அதனால், உடனடியாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு மிக குறைவு.