Kalaingar Magalir Urimai Thogai | இன்னும் 12 மாதங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2 மடங்கு உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) உயர்த்துவது தொடர்பான மாஸ் அறிவிப்பு இன்னும் 12 மாதங்களுக்குள் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. என்ன காரணம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். விரைவில் புதிய பயனாளிகளும் சேர்க்கப்பட இருக்கின்றனர்.
விரைவில் நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்குவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. அதாவது புதியதாக இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்த பெண்கள் சேர்க்கப்பட இருக்கின்றனர்.
இதைகூறியது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த அறிவப்பை அவர் வெளியிட்டார். இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உயர்வதற்கான வாய்ப்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இப்போதைய சூழலில் தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என்றாலும் இன்னும் 12 மாதங்களில் இந்த திட்டத்தில் பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் இரட்டிப்பாக அதிக வாய்ப்பு இருக்கிறது.
எப்படி என கேட்கிறீர்களா?. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பே இருக்கும்.
ஏனென்றால் இப்போது ஆளும் திமுக அரசுக்கு எதிராக பிரதான எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக இந்த திட்டத்தின் தொகையை உயர்த்து வழங்குவோம் என நிச்சயம் தேர்தல் வாக்குறுதி கொடுப்பார்கள். அதேபோல் திமுகவும் மாதம் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் தொகையை உயர்த்தி வழங்குவோம் என தெரிவிப்பார்கள்.
இதனால் எந்த கட்சி தமிழ்நாட்டில் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து உயரப்போவது மட்டும் உறுதி. அதனால் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக இருந்தால் உங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி காத்திருக்கிறது.
அதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை பயனாளிகளாக இல்லாதவர்கள் அனைத்தும் தகுதிகளும் இருப்பினும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து பயனாளியாகிக் கொள்ளவும்.