கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : இந்த பெண்கள் விரைவில் நீக்கம் - முக்கிய அப்டேட்

Published: Sep 04, 2025, 08:31 PM IST|Updated: Sep 04, 2025, 08:31 PM IST

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இருந்து நீக்கப்படும் பெண் பயனாளிகள் யார்? முழு விவரம்

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இருந்து பெண்கள் பலர் நீக்கப்பட உள்ளனர். அவர்கள் யார்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

1/9

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் சேருவதற்கு புதிய பயனாளிகள் விண்ணப்பித்து வரும் அதேவேளையில், ஏற்கனவே பயனாளிகளாக இருக்கும் பெண்கள் பலர் நீக்கப்பட உள்ளனர்.

2/9

அவர்கள் யார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதை தெரிந்து கொள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகளக இருப்பவர்களுக்கான விதிமுறைகளில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

3/9

அது என்னவென்றால், மத்திய, மாநில அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்பத்தினர், ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பத்தினர் இந்த திட்டத்தில் பயனாளியாக இருக்க முடியாது.

 

4/9

அந்தவகையில் பார்க்கும்போது, தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டுகளில் நடத்திய டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ, குரூப் 4 மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறது.

5/9

பல துறைகளில் டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று பணி நியமன ஆணைகளை பெற்றவர்கள், தங்களது பணிக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

6/9

அண்மையில், சென்னை தலைமை செயலகத்தில் குரூப் 1 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

7/9

ஒட்டுமொத்தமாக இந்த அரசுப் பணி நியமன ஆணைகளைப் பெற்றவர்களின் குடும்பத்தில் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தால் அவர்களின் பெயர்கள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்படும்.

8/9

அந்தவகையில் பார்க்கும்போது டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் வெற்றி பெற்று இப்போது பணி நியமன ஆணைகளைப் பெற்றவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சில ஆயிரம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இனி மாதம் ஆயிரம் ரூபாய் பெற முடியாது.

9/9

அத்தகைய பெண் பயனாளிகளின் பெயர்கள் சமூகநலத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து நீக்க உள்ளார்கள். எனவே, இப்போது இருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் எண்ணிக்கையில் இருந்து சில ஆயிரம் பேர் கட்டாயம் நீக்கப்பட இருக்கின்றனர்.