கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் டிசம்பர் பரிசு

Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு கொடுக்கப்போகும் டிசம்பர் பரிசு. முழு விவரம்

 

Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு விரைவில் குட் நியூஸ் கொடுக்கப்போகிறது. என்ன என்பதை இங்கே பார்க்கலாம் 

 

1 /10

தமிழ்நாடு அரசு முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் சேர அனுமதி அளித்துள்ளது. அதற்காக மகளிர் உரிமைத் திட்ட விதிமுறையிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  

2 /10

அதன்படி, காலமுறை ஓய்வூதியம் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.  

3 /10

அதாவது, ஓய்வூதியம் பெறுபவர்களை தவிர்த்து குடும்பத்தில் வேறு தகுதிவாய்ந்த பெண்கள் இருப்பின் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஓய்வூதியம் பெறுபவர்கள் பெண்களாக இருப்பின் அவர்கள் விண்ணப்பிக்க முடியாது.  

4 /10

அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை அரசு ஊழியர்களாக பணியாற்றியவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அதனை பரிசீலித்த தமிழ்நாடு அரசு இந்த விதிமுறையை சேர்த்துள்ளது.    

5 /10

அதேநேரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பிற விதிமுறைகளையும் பூர்த்தி செய்பவர்களாக இருக்க வேண்டும். இதனால், தமிழ்நாடு முழுவதும் 2.5 லட்சத்துக்கும் குறைவான காலமுறை ஓய்வூதியம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்திருக்கின்றனர்.  

6 /10

அவர்களில் தகுதியானவர்களை தமிழ்நாடு அரசு இறுதி செய்து கொண்டிருக்கிறது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கட்டாயம் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1000 கிடைக்கும்.  

7 /10

இது தொடர்பான அப்டேட் டிசம்பர் 2வது வாரத்தில் வர இருக்கிறது. ஏற்கனவே, தமிழ்நாட்டு பெண்கள், குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்கள் அரசின் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  

8 /10

தகுதியான பெண்கள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக இருக்கிறது. அதேநேரத்தில், யாராவது எல்லா விதிமுறைகளையும்  பூர்த்தி செய்தும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு கடந்த முறையைப் போலவே இம்முறையும் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

9 /10

மேலும், தகுதியில்லாத பெண்கள் யாரேனும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இருந்தாலும் அவர்கள் குறித்து https://kmut.tn.gov.in/public_complaints.html என்ற லிங்கில் ஆன்லைனில் புகார் தெரிவிக்கலாம்.   

10 /10

உங்கள் புகாரை பரிசீலித்து, அதில் உண்மை இருப்பின் தமிழ்நாடு அரசு அந்த பயனாளியை இத்திட்டத்தில் இருந்து நீக்கிவிடும்.