Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக இன்னும் 60 நாட்களில் பெண்களுக்கு 2 சர்ப்பிரைஸ் வரப்போகிறது.
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விரைவில் வரப்போகும் சர்ப்பிரைஸ் அறிவிப்புகள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கிலேயே வரவு வைப்பது தான் இத்திட்டத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்
2023 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டபோது 1.13 கோடி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த தமிழ்நாடு அரசு, அண்மையில் இத்திட்டத்தை விரிவுபடுத்தியது. கூடுதலாக 17 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 1.30 கோடி பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர்.
இன்னும் விடுபட்ட பெண்கள் இருந்தால் அவர்களையும் இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் விரைவில் மகளிர் உரிமைத்தொகை உயர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் தான் பெண்களுக்கு 2 குட் நியூஸ் இருக்கிறது. முதலமைச்சர் சொல்லியிருப்பதுபோலவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படுவதற்கான அறிவிப்புகள் இன்னும் 60 நாட்களில் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.
எப்படி என கேட்கிறீர்களா? தமிழ்நாட்டில் இன்னும் நான்கு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக, எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக என இரண்டு கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி, தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுக்களையும் அமைத்துவிட்டன.
இந்த தேர்தல் அறிக்கை வெளியாகும்போது தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படுவதற்கான வாக்குறுதிகளும் வெளியாகும். இரண்டு கட்சிகளும் இன்னும் 60 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிட இருக்கின்றன.
அதாவது மார்ச் மாதம் பிற்பகுதிக்குள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எவ்வளவு உயர்த்தப்படும்? என்ற அறிவிப்பை திமுகவும், அதிமுகவும் தேர்தல் அறிக்கையில் வெளியிட இருக்கின்றன.
ஜூன் மாதம் புதிதாக பொறுப்பேற்கும் அரசு, தேர்தல் அறிக்கையில் கொடுக்கும் வாக்குறுதியின் அடிப்படையில் உயர்த்தபடும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பெண்களுக்கு கொடுக்கும்.
இந்த தேர்தல் அறிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயர்வு தான் மிகப்பெரிய ஹைலைட்டாகா இருக்கப்போகிறது. கூடவே, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம்பெற்றால், அந்த தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும்.
இதனால், திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட இருக்கின்றன. எப்படி பார்த்தாலும் தமிழ்நாட்டு பெண்களுக்கு இரு கட்சிகளும் சர்ப்பிரைஸ்களை கொடுக்கப்போவது உறுதி.
அதிகபட்சம் மகளிர்உரிமைத்தொகை எவ்வளவு உயர்த்தி கொடுக்கப்படும்? என்ற கேள்வி இருக்கலாம். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் அதிமுக, மகளிர் உரிமைத்தொகை மாதம் 3000 அல்லது அதற்கு மேல் கொடுக்கப்படும் என அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஆட்சியில் இருக்கும் திமுக 2000 ரூபாய் வரை உயர்த்தி கொடுக்கப்படும் என அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. 60 நாட்கள் பொறுத்திருந்தால், இந்த சர்பிரைஸூக்கான பதில் கிடைத்துவிடும்.