Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக எத்தனை பேருக்கு ரூ.1000 கிடைக்கும்?
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக எத்தனை பேர் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்? என்பது குறித்த அப்டேட் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது.
1.15 கோடி பெண்கள் பயனாளிகளாக இருக்கும் இத்திட்டத்தில் இப்போது புதிய பயனாளிகள் இணைவதற்கு விண்ணப்பம் கொடுக்கலாம். இதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
அந்தந்த மாவட்டங்களில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான மனுக்கள் கொடுக்கப்படுகின்றன. இதுவரை இத்திட்டத்தில் பயனாளிகளாக இல்லாத பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
எல்லோரும் விண்ணப்பிக்க முடியாது. இத்திட்டத்துக்காக அரசு நிர்ணயித்திருக்கும் விதிமுறைகளை பூர்த்தி செய்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விதிமுறைகள் பூர்த்தி செய்யாதவர்கள் விண்ணப்பித்தாலும், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
ஒருவேளை உங்களுக்கு விதிமுறைகள் தெரியவில்லை என்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விதிமுறைகள் என கூகுள் உள்ளிட்ட ஆன்லைனில் பிரவுசர்களில் தேடவும். இத்திட்டத்துக்கான விதிமுறைகளை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.
இதுவரை விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள் கூட நவம்பர் மாதம் இந்த முகாம்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பகுதி வாரியாக நடக்கும் முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.
இம்முறை எவ்வளவு பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. அதேநேரத்தில் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதை மட்டும் அரசு உறுதியாக தெரிவித்திருக்கிறது.
எனவே, விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்களுக்கு எல்லாம் கட்டாயம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும். இதுவரை தோரயமாக 18 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனு கொடுத்த அனைவரது விண்ணப்பங்களையும் அரசு பரிசீலித்து இன்னும் 2 மாதங்களில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. அதற்குள் தகுதியான பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்து அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்க உள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2 மாதங்களுக்குள் நல்ல செய்தி வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி பார்த்தால் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.