கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிய விண்ணப்பத்தின் நிலை என்ன?

Published: Sep 01, 2025, 09:33 PM IST|Updated: Sep 01, 2025, 09:33 PM IST

kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை புதிய விண்ணப்ப அப்டேட்டை எதிர்நோக்கும் பெண்கள். முழு விவரம்

kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்கள் அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

1/9

உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கி 45 நாட்களை நிறைவு செய்திருப்பதால், புதிதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு விண்ணப்பித்த பெண்கள், தங்களின் விண்ணபங்கள் மீதான அப்டேட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

2/9

ஜூலை 15 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கிய உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஒவ்வொரு தாலுகாவிலும் பகுதி வாரியாக தினம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்டு 14 ஆம் தேதியுடன் இதன் முதல் கட்டம் நிறைவடைந்துவிட்டது.

3/9

இப்போது இரண்டாவது கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்து கொண்டிருக்கிறது. இதிலும், தகுதியான பெண்கள் ஆர்வமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

4/9

இந்த முகாமில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்திருப்பதால், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக புதிதாக விண்ணப்பித்த பெண்கள் அப்டேட் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.

5/9

தங்களின் விண்ணப்ப நிலை குறித்து ஆன்லைனிலும் இப்போது தெரிந்து கொள்ள முடியாது என்பதால், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கியிருக்கின்றனர். இதுவரை 17 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்திருக்கின்றனர்.

6/9

இந்த சூழலில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ’உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

7/9

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்குவது குறித்தும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்திருக்கின்றனர். இப்போதைய சூழலில் முதல்கட்டமாக பெறப்பட்ட மனுக்களை பரிசீலிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. 

8/9

முதலமைச்சர் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய பிறகு இந்த திட்டம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம். ஏனென்றால், செப்டம்பர் 15, 2025 அன்று தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

9/9

அதனை வைத்து பார்க்கும்போது வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான அப்டேட்டுகள் தமிழ்நாடு அரசிடமிருந்து வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றன.